மனம் நைந்து இரங்குகின்ற இரங்குதலை நோக்குவான்; எயிலு அலைத்து இடிக்கும் பேழ்வாய்த்தலை இலா ஆக்கை ஈட்டம் - பற்களைக் கடித்து இடிபோற் பேரொலி செய்யும் பிளந்த வாயினை உடையதலைகள் உயிருள்ள காலத்து உடையனவாய் இப்பொழுது இலாத உடல்களின் தொகுதிகள்; பயிறலை - (போர்க்களம் எங்கும்) பொருந்தி ஆடுவதனையும்; பறவை பாரில் படிகிலாப் பரப்பை, பார்க்கும் - (அவற்றை நெருங்குதற்கு அஞ்சிப் பறவைகள் பூமியிற் படிந்து நிணங்கவர்தற்கு இயலாத (போர்க்களப்) பரப்பினையும் (ஒருங்கு) நோக்குவான். |
(31) |
8472. | ‘அங்கதர் அனந்த கோடி உளர்’ எனும்; ‘அனுமன் என்பாற்கு இங்கு இனி உலகம் யாவும் இடம் இலை போலும்’ என்னும்; ‘எங்கும் இம் மனிதர் என்பார் இருவரேகொல்!’ என்று உன்னும்;- சிங்கஏறு அனைய வீரர் கடுமையைத் தெரிகிலாதான். |
அங்கதர் அனந்தகோடி உளர் எனும் - (இலக்குவனைச் சுமந்து திரியும்) அங்கதராயினார் (ஒருவரன்றிப்) பல கோடி அளவினராக உள்ளார்’ என்பான்; இங்கு அனுமன் என்பாற்கு - இங்கு (இராமனைச் சுமந்து திரியும்) அனுமன் என்பவனுக்கு; இனி உலகம் யாவும் இடம் இலை போலும் என்னும் - எல்லா உலகங்களிலும் இடம் இல்லையாய் விடுமோ என்பான்; சிங்க ஏறு அனைய வீரர் - ஆண் சிங்கத்தினை ஒத்த வீரர்களாகிய இராம இலக்குவரது; கடுமையைத் தெரிகிலாதான் - போரின் விரைவினை அறிந்து கொள்ள இயலாதவனாகிய இந்திரசித்து; எங்கும் இம்மனிதர் என்பார் இருவரே கொல் என்று உன்னும் - இம்மனிதர் இருவரே எல்லா இடங்களிலும் நிரம்பி விட்டார்களோ? என இவ்வாறு எண்ணுவானாயினான். |
(32) |
8473. | ஆர்க்கின்ற அமரர்தம்மை நோக்கும்; அங்கு அவர்கள் அள்ளித் தூர்க்கின்ற பூவை நோக்கும்; துடிக்கின்ற இடத் தோள் நோக்கும்; |