| முளைப் பிறை நெற்றி வான மடந்தையர், முன்னும் பின்னும், வளைத்தனர் வந்து சூழ, வந்திகர் வாழ்த்த, வந்தான். |
முளைப்பிறை நெற்றி வான மடந்தையர் - இளம்பிறை போன்ற நெற்றியை உடைய தேவ மகளிர்; விளக்கு ஒரு விளக்கம் தாங்கி - ஒளியுள்ள விளக்கு ஒரு விளக்கைத் தாங்கிக் கொண்டு; மின் அணி அரவின் சுற்றி - ஒளி பொருந்திய மேகலையைப் பாம்பு போல் இடுப்பிலே சுற்றி; இளைப்புறும் மருங்குல் நோவ - இளைத்தலுடைய இடை நோகுமாறு; முலை சுமந்து இயங்கும் என்ன - முலையைச் சுமந்து கொண்டு இயங்கும் என்று வருணித்துக் கூறுமாறு; முன்னும் பின்னும் வளைத்தனர் வந்து சூழ - தம் முன்னும் பின்னும் வளைத்து வந்து சூழ; வந்திகர் வாழ்த்த வந்தான் - பரவி வாழ்த்துவோர் வாழ்த்த வந்தான். |
முளைப்பிறை - இளம்பிறை; வந்திகர் - பரவி வாழ்த்துவோர்; வளைத்தனர் - முற்றெச்சம். |
(6) |
இராவணன் பீடத்தில் வீற்றிருந்து, சீதையை நோக்கிப் பேசுதல்
|
7638. | பண்களால் கிளவி செய்து, பவளத்தால் அதரம் ஆக்கி, பெண்கள் ஆனார்க்குள் நல்ல உறுப்பு எலாம் பெருக்கின் ஈட்ட, எண்களால் அளவு ஆம் மானக் குணம் தொகுத்து இயற்றினாளை, கண்களால் அரக்கன் கண்டான், அவளை ஓர் கலக்கம் காண்பான். |
பண்களால் கிளவி செய்து - இசையால் பேச்சைச் செய்து; அதரம் பவளத்தால் ஆக்கி - உதடுகளைப் பவளத்தால் ஆக்கி; பெண்கள் ஆனார்க்குள் - பெண்களாய்ப் பிறந்தவர்களுக்கு அமைந்த; நல்ல உறுப்பு எலாம் பெருக்கின் ஈட்ட - அழகிய உறுப்புகளை எல்லாம் மிகுதியாகச் சேர்த்து உண்டாக்கி; எண்களால் அளவு ஆம் மானக்குணம் தொகுத்து இயற்றிளாளை - எண்ணி அளவிட முடியாத பெருமை மிகு பண்புகளை ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்டவளான சீதையை; கண்களால் அரக்கன் - தன் இருபது கண்களாலும் காம நோக்கோடு இராவணன்; |