பேரச்சத்தினால் மனக்கலக்கம் நீங்காதனவாய்; புகுந்திலது அன்றே - போர்க்களத்தில் மீண்டும் புகாதனவாயின. |
(34) |
| 8475. | தளப் பெருஞ் சேனை வெள்ளம் அறுபதும் தலத்தது ஆக, அளப்ப அருந் தேரின் உள்ள ஆயிர கோடி ஆக, துளக்கம் இல் ஆற்றல் வீரர் பொருத போர்த் தொழிலை நோக்கி, அளப்ப அருந் தோளைக் கொட்டி, அஞ்சனை மதலை ஆர்த்தான். |
தளப் பெருஞ் சேனை வெள்ளம் அறுபதும் - போர்க்களத்தில் பொருது நிற்கும் பெருமையுடைய அறுபது வெள்ளம் அரக்கர் சேனையும்; தலத்தது ஆக - (அழிவுற்று) நிலத்தின் கண்ணதாய் மடியவும்; அளப்பருந்தேரின் உள்ள ஆயிரகோடி ஆக - அளந்து அறிதற்கிலாத தேர்களின் மேலுள்ள (அரக்கர்) சேனை ஆயிரங்கோடி என்னும் அளவுடையதாய் நிற்கவும்; துளக்கம் இல் ஆற்றல் வீரர் - மனங்கலங்குதல் இல்லாத ஆற்றல் மிக்க வீரர்களாகிய இராம இலக்குவர்; பொருத போர்த் தொழிலை நோக்கி - எதிர்த்து நின்ற போர்ச் செயலைக் கண்ணுற்று; அஞ்சனை மதலை - அஞ்சனை என்பாளது மகனான அனுமன்; அளப்பருந் தோளைக் கொட்டி ஆர்த்தான் - அளத்தற்கரிய (தனது) தோளைத் தட்டிக்கொண்டு பெருமுழக்கம் செய்தான். |
(35) |
| 8476. | ஆர் இடை அனுமன் ஆர்த்த ஆர்ப்பு ஒலி அசனி கேளா, தேரிடைநின்று வீழ்ந்தார் சிலர்; சிலர் படைகள் சிந்தி, பாரிடை கிழிந்து போகப் பாரித்தார்; பைம் பொன் இஞ்சி ஊரிடை நின்றுளாரும், உயிரினோடு உதிரம் கான்றார். |
ஆர்இடை அனுமன் ஆர்த்த ஆர்ப்பு ஒலி - நெருங்குதற்கரிய போர் அரங்கில் அனுமன் ஆரவாரம் செய்ததால் எழுந்த பெரு முழக்கமாகிய; அசனிகேளா - இடியொலியைக் கேட்டு; தேரிடை நின்று வீழ்ந்தார் சிலர் - (தேரில் உள்ளாராகிய அரக்கர்களில்) சிலர் தேரில் நின்றபடியே வீழ்ந்து உயிர்துறந்தார்கள்; சிலர் படைகள் |