பக்கம் எண் :

 பிரம்மாத்திரப் படலம் 501

சிந்தி     -  சிலர்   தம்    கையிலுள்ள  படைக்கலங்களைக்  கீழே
சிதறவிட்டு;  பாரிடை  இழிந்து போகப் பாரித்தார் - தேரிலிருந்தும்
கீழே   இறங்கித்  தப்பி  ஓடுதற்குப்  பரபரப்புற்றார்கள்;  பைம்பொன்
இஞ்சி ஊரிடை நின்றுளாரும்
- பசிய பொன்மயமான மதிலாற் சூழப்
பட்ட    (இலங்கையாகிய)    ஊரினுள்ளே    உள்ள  அரக்கர்களும்;
உயிரினோடு  உதிரம்  கான்றார்  -   உயிருடனே    இரத்தத்தைக்
கக்கினார்கள்.
 

                                                  (36)
 

                            இந்திரசித்தன் தனியனாகப் பொருதல்
 

8477.

‘அஞ்சினிர், போமின்; இன்று,   ஓர்   ஆர்ப்பு   ஒலிக்கு
                                     அழியற்பாலிர்
வெஞ் சமம் விளைப்பது  என்னோ?  நீரும் இவ் வீரரோடு
துஞ்சினிர் போலும்  அன்றே?’  என்று  அவர்ச்  சுளித்து
                                        நோக்கி,-
மஞ்சினும் கரிய மெய்யான்-இருவர்மேல் ஒருவன் வந்தான்.
 

மஞ்சினும்  கரிய மெய்யான் - மேகத்தினும் கருமையான உடலை
உடையவனாகிய இந்திரசித்து;  ‘இன்று,   ஓர்   ஆர்ப்பு   ஒலிக்கு
அழியற்பாலிர்
 -  ‘இப்பொழுது  ஓர்  ஆரவார  ஒலிக்கே மனமழியுந்
தன்மையுடைவர்களாய்;  அஞ்சினர்  -  அஞ்சியவர்களே; போமின் -
இவ்விடத்தை   விட்டு)  போய் விடுங்கள்;  வெஞ்சமம்  விளைப்பது
என்னோ
  -   (இத்தகைய   அச்சங்  கொண்டவர்களாகிய  நீங்கள்)
வெம்மையுடைய  போர்த்தொழிலை   நிகழ்த்துதல்  எவ்வாறு முடியும்?
நீரும் இவ்வீரரோடு துஞ்சினீர் போலும்  அன்றே?  -  (உயிருடன்
உள்ள)    நீங்களும்    (உயிர்     நீங்கிப்   பிணமாய்க்   கிடக்கும்)
இவ்வீரர்களுடன் ஒப்ப இறந்தொழிந்தீர்கள்  அல்லவா? என்று அவர்ச்
சுளித்து நோக்கி
- என்று கூறி அவர்களைச் சினந்து பார்த்து; இருவர்
மேல்  ஒருவன்  வந்தான்
 -  (இராம இலக்குவர்) இருவர் மீதும்தான்
ஒருவனாகவே பொருதற்கு வந்தான்.
 

                                                  (37)
 

8478.

அக் கணத்து, ஆர்த்து மண்டி, ஆயிர கோடித் தேரும்
புக்கன-நேமிப் பாட்டில் கிழிந்தன புவனம் என்ன,