பக்கம் எண் :

504யுத்த காண்டம் 

கொலைத்     தொழிலைத்  தன்   இயல்பான செய்கையாகக் கொண்ட
கூற்றுவனுக்குரிய  விருந்தினனாக (யான்) ஆகி; நெடு மைந்தரில் கடை
எனப்படுவன்
- (இவ்வுலகில் உயர்த்துக் கூறத்தகும்) பெருமை வாய்ந்த
வீரர்களிற்       கடையானவன்      என      இழித்துரைக்கப்படும்
நிலையினனாவேன்.
 

                                                  (41)
 

8482.

நின்னுடை முன்னர், இந் நெறி இல் நீர்மையான்-
தன்னுடைச் சிரத்தை என் சரத்தின் தள்ளினால்,-
பொன்னுடை வனை கழல் பொலம் பொன் தோளினாய்!-
என்னுடை அடிமையும் இசையிற்று ஆம்அரோ.
 

பொன்னடை     வனைகழல் பொலம்பொன்  தோளினாய்! -
பொன்னால்     அணிநலமுறப்      புனைந்த     வீரக்கழலினையும்
பொன்னணிகளையுடைய     அழகிய     தோள்களையும்    உடைய
அண்ணலே!   நின்னுடை   முன்னர்  -   நினது  (கண்)  முன்பாக;
இந்நெறியில்   நீர்மையன்   தன்னுடைச்   சிரத்தை   -   இந்த
அறமுறையற்ற தன்மையனாகிய  இந்திரசித்தனது   தலையினை;   என்
சரத்தின்      தள்ளினால்
   -     எனது    அம்பினால் அறுத்து
வீழ்த்துவேனாயின்; என்னுடை அடிமையும் இசையிற்று ஆம் - யான்
நின்பாற் கொண்ட அடிமைத்திறமும் போற்றத் தகும் புகழுடையதாகும்.
 

                                                  (42)
 

8483.

‘கடிதினில் உலகு எலாம் கண்டு நிற்க, என்
சுடு சரம் இவன் தலை துணிக்கலாதுஎனின்,
முடிய ஒன்று உணர்த்துவென்; உனக்கு நான் முயல்
அடிமையின் பயன் இகந்து அறுக, ஆழியாய்!’
 

ஆழியாய் - ஆணைச் சக்கரத்தை உடையவனே! கடிதினில் உலகு
எலாம்  கண்டு நிற்க
- விரைவினில் உலகம் எல்லாம் நோக்கி நிற்கும்
போழ்தே; என் சுடுசரம்  இவன்  தலை  துணிக்கலாது  எனின்  -
என்னுடைய   சுட்டழிக்க வல்ல அம்பு இந்த இந்திரசித்தனின் தலையை
அறுத்தெறியவில்லை  என்றால்;  முடிய  ஒன்று  உணர்த்துவேன்  -
முடிவாக  ஒரு  பொருள் (உனக்கு) மொழிவேன்; உனக்கு நான் முயல்
அடிமையின்  பயன்  இகந்து  அறுக
 - உனக்காக நான் முயல்கின்ற
அடிமைச் செயலின் பயன் (என்னை விட்டு) நீங்குவதாக;