பக்கம் எண் :

506யுத்த காண்டம் 

முளரிக்    கண்ணனும் - செந்தாமரைக் கண்ணனாகிய இராமனும்;
முறுவல் வாள்முகத்தினன்  -  (இலக்குவனது வஞ்சினத்தைக் கேட்டு)
புன்சிரிப்போடும்   கூடிய   ஒளிபெற்ற  முகத்தினனாகிய;  அறிவ  நீ
“அடுவல்” என்று  அமைதி ஆம் எனின்
- அறிவுடைய தம்பியே நீ
(பகைவரை)  கொல்வேன்’  என  முடிவு  செய்து  விட்டாய்  எனின்;
இறுதியும், காவலும்  இயற்றும்  ஈசரும்  வெறுவியர்  -  அழித்தல்
தொழிலையும்,   காத்தல்    தொழிலையும்   செய்யும்   இரு  பெருங்
கடவுளரும்  தத்தமக்குரிய  தொழிலை இழந்து வெறுமையுறுவர்; வேறு
இனி  விளைவது  யாது என்றான்
 - (நின் கருத்திற்கு) மாறாக இனி
இவ்வுலகில் நிகழக்கூடியது யாதுளது? என (இலக்குவனைப் பாராட்டிக்)
கூறினான்.
 

                                                  (45)
 

               இராமனைத் தொழுது, இலக்குவன் போருக்கு எழுதல்
 

8486.

சொல் அது கேட்டு, அடி தொழுது, ‘சுற்றிய
பல் பெருந் தேரொடும் அரக்கர் பண்ணையைக்
கொல்வல்; இங்கு அன்னது காண்டிகொல்’ எனா,
ஒல்லையில் எழுந்தனன்-உவகை உள்ளத்தான்.
 

சொல்வது    கேட்டு அடி தொழுது - (இராமபிரான் உளமுவந்து
கூறிய)   அம்மொழியினைக்  கேட்டு  (அப்பிரானுடைய)  திருவடிகளை
வணங்கி; சுற்றிய பல் பெருந் தேரொடும் - சுற்றிச் சூழ்ந்த பலவாகிய
தேர்களுடனே;   அரக்கர் பண்ணையைக்   கொல்வல்  -  அரக்கர்
தொகுதியை   இப்பொழுதே   கொன்றொழிப்பேன்;  இங்கு  அன்னது
காண்டி  கொல்
- இங்கு அதனைக் காண்பாயாக; எனா - என்று கூறி;
உவகை   உள்ளத்தான்   -   மகிழ்ச்சி   நிரம்பிய  மனத்தினனாகிய
இலக்குவன்;   ஒல்லையில்   எழுந்தனன்  -  விரைந்து  போருக்குப்
புறப்பட்டான்.
 

பண்ணை     - தொகுதி.  தனது  வஞ்சின மொழியினை மதித்துப்
பாராட்டி   இந்திரசித்தனைக்    கொல்லும்   செயலினைத்   தனக்கே
விடுத்தமையின்   இலக்குவன்   பெரிதும்   மகிழ்ந்தனன்  என்பதனை
‘உவகை உள்ளத்தான்’ என்பதனாற் குறித்தார்.
 

                                                  (46)
 

8487.

அங்கதன் ஆர்த்தனன், அசனி ஏறு என,
மங்குல்நின்று அதிர்ந்தன வய வன் தேர் புனை
சிங்கமும் நடுக்குற; திருவின் நாயகன்
சங்கம் ஒன்று ஒலித்தது, கடலும் தள்ளுற.