அங்கதன் ஆர்த்தனன் அசனி ஏறு என - (இலக்குவனைச் சுமந்து செல்லும்) அங்கதன் இடியேற்றினைப் போலப் போர் முழக்கம் செய்தான்; மங்குல் நின்று அதிர்ந்தன - (அதனால் விண்ணிடத்தே) மேகங்கள் நின்று அதிர்ந்தன; வயவன் தேர் புனை சிங்கமும் நடுக்குற - வீரனாகிய இந்திரசித்தன் தேரில் பூட்டியுள்ள சிங்கங்கள் நடுக்கமுறவும்; கடலும் தள்ளுற - கடல் ஓசை பின்னிடவும்; திருவின் நாயகன் சங்கம் ஒன்று ஒலித்தது - திருமகள் கேள்வனாகிய இராமனது சங்கம் ஒன்று முழங்கியது. | (47) | 8488. | எழு, மழு, சக்கரம், ஈட்டி, தோமரம், முழு முரண் தண்டு, வேல், முசுண்டி, மூவிலை, கழு, அயில் கப்பணம், கவண் கல், கன்னகம், விழு மழைக்கு இரட்டி விட்டு, அரக்கர் வீசினார். | எழு, மழு, சக்கரம், ஈட்டி, தோமரம் - எழுக்கள், மழுக்கள், சக்கரங்கள், ஈட்டிகள், தோமரங்கள்; முழு முரண் தண்டு வேல், முசுண்டு, மூவிலை கழு - நிறைந்த வன்மை கொண்ட கதாயுதங்கள், வேற்படைகள், முசுண்டிகள், மூன்று இலைவடிவமான கழுக்கள்; அயில் கப்பணம், கவண்கல், கன்னகம் - கூரிய கப்பணங்கள், கவணில் அமைத்து வீசுங்கற்கள், கன்னகங்கள் ஆகிய இப்படைகளை; விழு மழைக்கு இரட்டி விட்டு, அரக்கர் வீசினார் - விண்ணினின்று சொரியும் மழையைக் காட்டிலும் இரு மடங்காக அரக்கர்கள் வீசி எறிந்தார்கள். | (48) | 8489. | மீன் எலாம் விண்ணின்நின்று ஒருங்கு வீழ்ந்தென, வான் எலாம் மண் எலாம் மறைய வந்தன; தான் எலாம் துணிந்து போய்த் தகர்ந்து காந்தின;- வேனிலான் அனையவன் பகழி வெம்மையால். | வான் எலாம் மண் எலாம் மறைய வந்தன - (மழைக்கு இரட்டிப்பாய் அரக்கரால் வீசப்பெற்று) வான் முழுதும் மண் முழுதும் மறையுமாறு வந்தனவான படைக்கலன்கள்; வேனிலான் அனையவன் பகழி வெம்மையால் - வேனிற் காலத்துக்கு உரியவனான மன்மதனை ஒத்த பேரழகினை உடைய இலக்குவனது அம்புகளின் கடுமையால்; மீன் எலாம் விண்ணின் நின்று ஒருங்கு வீழ்ந்தென - விண்மீன்களெல்லாம் விசும்பினின்றும் ஒருசேர வீழ்ந்தன எனும்படி; தான் எலாம் துணிந்து |
|
|
|