பக்கம் எண் :

508யுத்த காண்டம் 

போய்த்    தகர்ந்து   காந்தின   -   அனைத்தும்   துண்டுபட்டுப்
பொடியாகச் சிதறி ஒளிவிட்டுக் கிடந்தன.
 

                                                  (49)
 

8490.

ஆயிரம் தேர், ஒரு தொடையின், அச்சு இறும்;
பாய் பரிக் குலம் படும்; பாகர் பொன்றுவர்;
நாயகர் நெடுந் தலை துமியும், நாம் அற;
தீ எழும், புகை எழும், உலகும் தீயுமால்.
 

ஒரு தொடையின் - (இலக்குவன்) ஒருமுறை தொடுத்த அம்பினால்;
ஆயிரம் தேர்  அச்சு  இறும்  -  (அரக்கர்களின்) ஆயிரந் தேர்கள்
அச்சு  முறிந்து  விழும்;  பாய்பரிக்  குலம்படும்  -  (அத்தேர்களிற்
பூட்டிய)  தாவிச்செல்லும்  குதிரைக் கூட்டங்கள் இறந்து விழும்; பாகர்
பொன்றுவர்
- (அத்தேர்களின்) தேரோட்டிகள் இறப்பர்; நாம் அற -
அச்சம்    நீங்கும்படி;    நாயகர்    நெடுந்தலை    துமியும்   -
(அத்தேர்களுக்குரிய)  தலைவர்களின்  பெரிய  தலைகள்  துணிபடும்;
தீயெழும், புகை எழும் - (அம்பு பட்ட இடங்களில்) தீ மேற்கிளம்பும்,
புகைப்படலம்  மேல்  எழும்;  உலகும் தீயும் - (அதனால்) உலகமும்
தீய்ந்து வெதும்பும்.
 

                                                  (50)
 

8491.

அடி அறும் தேர்; முரண் ஆழி அச்ச இறும்;
கடி நெடுஞ் சிலை அறும்; கவச மார்பு இறும்;
கொடி அறும்; குடை அறும்; கொற்ற வீரர்தம்
முடி அறும்; முரசு அறும்; முழுதும் சிந்துமால்.
 

தேர்   அடி   அறும்   -   (மற்றும்   அவ்இலக்குவன்   எய்த
அம்புகளினால்)  தேர்களின்    அடிப்பகுதி  அற்றுச் சிதையும்; முரண்
ஆழி  அச்சு  இறும்
 -  வலிய  தேர்ச்சக்கரங்களின்  அச்சு அற்றுச்
சிதையும்;  கடி நெடுஞ்சிலை அறும் - வலிய நெடிய விற்கள் முறியும்;
கவச  மார்பு  இறும் - (வீரர்களின்) கவசம் அணிந்த மார்பு பிளக்கப்
பெறும்;   கொடி,  அறும், குடை  அறும்  -  கொடிகள்  அறுபடும்
(அத்துடன்)  குடைகள் முறியும்;  கொற்ற  வீரர்தம்  முடி  அறும் -
வெற்றி  மிக்க  வீரர்கள்   (அணிந்த)  முடிகள் அறுந்துபோகும்; முரசு
அறும்
-  (வெற்றிக்கு அறிகுறியாக அடித்தற்கு வைத்துள்ள) வீர முரசு
கிழிந்துபடும்; முழுதும்  சிந்துமால்  -  (இங்ஙனம்)  எஞ்சுதல் இன்றி
அனைத்தும் அழிவனவாயின.