தும்பை அம் தொடையலர் தடக்கை - அழகிய தும்பை மாலையை அணிந்த அரக்க வீரர்களுடைய பெரிய கைகள்; தூணி வாங்கு அம்பொடும் துணிந்தன - அம்பறாத் தூணியி னின்றும் பற்றி எடுக்கும் அம்பினோடும் துணிக்கப்பட்டனவாகி; சிலையொடு அற்றன - (பற்றிய) வில்லுடன் அறுபட்டன; செங்கண் மீன் கொம்பொடும் - சிவந்த கண்களை உடைய மீன்கள் கொம்புடன்; பரவையில் திரியும் கொட்பு என - கடலிடை அலைந்து சுற்றும் தன்மைக்கு ஒப்பாக; செம்பெருங் குருதியின் திகழ்ந்த - செந்நிறம் வாய்ந்த குருதிப் பெருவெள்ளத்திலே விளங்கித் தோன்றின. | கொம்பு மீன், சுறாமுதலியன. இச்செய்யுள் தற்குறிப்பேற்ற அணி. “அதிரப்பொருவது தும்பை” என்ற தமிழர் போர் முறை இங்கு இந்திரசித்து இலக்குவர் ஆகியோர்க்கிடையில் வைத்து ஆசிரியரால் பேசப் பெறுகின்றது. “தும்பை அம்தொடையலர்” என்பது ‘தும்பை மலர் மாலையை அணிந்தவர்’ என்னும் பொருளதாயிற்று. | (54) | 8495. | தடிவன கொடுஞ் சரம் தள்ள, தள்ளுற மடிவன கொடிகளும், குடையும், மற்றவும், வெடி படு பெரும் பிணக் களத்தில் மொய்த்தன, படிவன, ஒத்தன, பறவைப் பான்மையா. | தடிவன கொடுஞ்சரம் தள்ள, தள்ளுற மடிவன - வெட்டி வீழ்த்துந் தன்மையனவாகிய கொடிய அம்புகள் வெட்டித் தள்ளுதலால் தள்ளப்பட்டு வீழ்ந்து கிடப்பனவாகிய; கொடிகளும் குடையும் மற்றவும் - கொடிகளும், குடைகளும் ஏனையவும்; வெடிபடு பெரும்பிணக் களத்தில் மொய்த்தன - அச்சந்தரத்தக்க பெரும்பிணக் குவியலையுடைய போர்க்களத்திலே நெருங்கியுள்ளவை; படிவனபான்மையா பறவை ஒத்தன - (பிணங்களை உண்ணுதற்கு) பறவைகள் பலவாகப் படியுந் தன்மையினை ஒத்தன. | (55) | கலிநிலைத்துறை | 8496. | சிந்துரங்களின் பருமமும், பகழியும், தேரும், குந்து வல் நெடுஞ் சிலை முதல் படைகளும், கொடியும், இந்தனங்களாய், இறந்தவர் விழிக் கனல் இலங்க, வெந்த வெம் பிணம் விழுங்கின, கழுதுகள் விரும்பி. |
|
|
|