பக்கம் எண் :

 பிரம்மாத்திரப் படலம் 511

சிந்துரங்களின்    பருமமும்  பகழியும் தேரும் - யானைகளின்
மேல் இடும்  தவிசும்,  அம்புகளும்  தேரும்; குந்துவல் நெடுஞ்சிலை
முதல்  படைகளும்  கொடியும்
 -  வளைந்த  வலிய  நெடிய  வில்
முதலிய  படைகளும்,  கொடியும்;    இந்தனங்களாய்  -  விறகுகளாக
(அமைய) இறந்தவர் விழிக்கனல் இலங்க - இறந்த வீரர்களுடைய (சினம்
மிக்க) கண்களாகிய தீ (கொழுந்து விட்டு) விளங்க; வெந்த வெம்பிணம்
கழுதுகள் விரும்பி  விழுங்கின
- வெந்தன போன்ற வெம்மையுடைய
பிணங்களைப் பேய்கள் விரும்பி விழுங்கின.
 

போர்க்களத்தில்     பகைவரைக் காணுந்தோறும்  சினம்  மிகுந்து
வீரர்கள்   விழியில்   தீப்பொறி  பறக்கும்.  எனவே  பருமம்,  பகழி
முதலானவற்றை  விறகாக்கி,  வீரர்கள்  விழி  நெருப்பினை  அதனை
எரிக்கும் அனலக்கினார்; இஃது இயைபுருவகம் என்னும் அணியாம்.
 

                                                  (56)
 

8497.

சில்லி ஊடு அறச் சிதறின சில; சில, கோத்த
வல்லி ஊடு அற, மறிந்தன; புரவிகள் மடியப்
புல்லி மண்ணிடைப் புரண்டன சில; சில, போர் ஆள்
வில்லி சாரதியொடும் பட, திரிந்தன வெறிய.
 

சில  சில்லி  ஊடு  அறச்  சிதறின  - சில தேர்கள் சக்கரங்கள்
நடுவே முறியச்  சிதறின; கோத்த சில வல்லி ஊடு அற மறிந்தன -
(ஒன்றோடு ஒன்று  மோதி)  பிணைந்த  சில  தேர்கள் குசைக்கயிறுகள்
இடையில்  அறுபட்டொழிய    குப்புற    வீழ்ந்தன;  சில,  புரவிகள்
மடியப் புல்லி   மண்ணிடைப்  புரண்டன
 -  சில தேர்கள் கட்டிய
குதிரைகள் இறந்து  விழத் தரையிற் பொருந்தி உருண்டன; சில போர்
ஆள் வில்லி  சாரதியொடும் பட வெறிய திரிந்தன
- சில தேர்கள்,
போர்த்தொழிலை ஆள்பவனாகிய வில்வீரன் பாகனொடும்   இறந்துபட
(யாரும் அமர்வாரின்றி) வெறுமையுடையனவாய்த் திரிந்தன.
 

                                                  (57)
 

8498.

அலங்கு பல் மணிக் கதிரன, குருதியின் அழுந்தி,
விலங்கு செஞ் சுடர் விடுவன, வெளி இன்றி மிடைந்த,-
குலம் கொள் வெய்யவர் அமர்க் களத் தீயிடைக் குளித்த
இலங்கை மா நகர் மாளிகை நிகர்த்தன-இரதம்.