பக்கம் எண் :

512யுத்த காண்டம் 

அலங்கு   பல்மணிக்  கதிரன  -  விட்டு  விளங்கும்  பலவகை
மணிகளின்  ஒளிக்கற்றைகளை  உடையனவும்;  குருதியின்  அழுந்தி
விலங்கு   செஞ்சுடர்    விடுவன
   -    இரத்த    வெள்ளத்தில்
அழுந்தினமையால் மேலே பரவிப்பாயும்  செந்நிற  ஒளியை வீசுவனவும்
ஆகி;   வெளி   இன்றி   மிடைந்த  இரதம் - இடைவெளி இன்றி
நெருங்கிய தேர்கள்; குலங்கொள் வெய்யவர் மறுகிடத் - கூட்டமாகப்
பொருந்திய  கொடியோராகிய    அரக்கர்கள்    மனங்கலங்கி வருந்த;
தீயிடைக் குளித்த இலங்கை  மாநகர்    மாளிகை    நிகர்த்தன
-    (அநுமனாற் கொளுத்தப்பட்ட) தீயினுள்ளே அழுந்திய இலங்கைப்
பெருநகரத்தினுள்ளேயுள்ள மாளிகைகளை ஒத்துத் தோன்றின.
 

                                                  (58)
 

              இராமனும் அம்புசொரிதலால் இந்திரசித்து தனிப்படுதல்
 

8499.

ஆன காலையில், இராமனும், அயில் முகப் பகழி
சோனை மாரியின் சொரிந்தனன், அனுமனைத் தூண்டி;
வான மானங்கள் மறிந்தெனத் தேர் எலாம் மடிய,
தானும் தேருமே ஆயினன், இராவணன் தனயன்.
 

ஆன   காலையில்    இராமனும்   அனுமனைத்   தூண்டி -
அப்பொழுது    இராமபிரானும்  (தன்னைத்  தாங்கியுள்ள)  அநுமனை
(இந்திரசித்தன்    முன்னர்ச்) செல்லுமாறு செலுத்தி; அயில்முகப் பகழி
சோனை மாரியிற் சொரிந்தனன்
-   கூரிய    முனையுடன்   கூடிய
அம்புகளை விடாப்பெருமழை போற் சொரிந்தான்;   (அதனால்)  தேர்
எலாம் வானமானங்கள் மறிந்தென   மடிய
-    அரக்கர்களுடைய
தேர்களெல்லாம்,   வான்வழியே   செல்லும்    விமானங்கள்,  குப்புற
வீழ்ந்தாற்  போன்று  சிதைந்து  வீழ்ந்தமையால்; இராவணன் தனயன்
தானும் தேருமே ஆயினன்
- இராவணன் மைந்தனாகிய இந்திர சித்து
தானும் தன்னுடைய தேருமேயாகத் தனிப்பட்டான்.
 

                                                  (59)
 

                          இந்திரசித்து ஒன்று கூறத் தொடங்குதல்
 

8500.

பல் விலங்கொடு புரவிகள் பூண்ட தேர்ப் பரவை
வல் விலங்கல்போல் அரக்கர்தம் குழாத்தொடு மடிய,
வில் இலங்கிய வீரரை நோக்கினன், வெகுண்டான்,
சொல், விலங்கலன், சொல்லினன்-இராவணன் தோன்றல்.