பக்கம் எண் :

 பிரம்மாத்திரப் படலம் 513

பல் விலங்கொடு  புரவிகள்  பூண்ட  தேர்ப்  பரவை  -  பல
விலங்குகளுடன்   குதிரைகள்  பூட்டப்பட்ட  தேர்த் தொகுதிகள்; வல்
விலங்கல் போல் அரக்கர்   தம்  குழாத்தொடு  மடிய
 -  வலிய
மலைகளைப்   போன்று  அரக்கர்  கூட்டத்துடன்  மடிந்து  கிடக்கக்
(கண்ட);   இராவணன்   தோன்றல்   - இராவணன்  மைந்தனாகிய
இந்திரசித்து; வில் இலங்கிய  வீரரை நோக்கினன் வெகுண்டான் -
(அவற்றை)   விற்றொழிலால்   அழித்தொழித்த  வீரர்களாகிய  இராம
இலக்குவர் இருவரையும் நோக்கி வெகுண்டவனாகி; விலங்கலன் சொல்
சொல்லினன்
  -   (போரிற்)   பின்னிடாதவனாய்  ஒரு  சொல்லைச்
சொன்னான்.
 

                                                  (60)
 

8501.

‘இருவிர் என்னொடு பொருதிரோ? அன்றுஎனின், ஏற்ற
ஒருவிர் வந்து, உயிர் தருதிரோ? உம் படையோடும்
பொருது பொன்றுதல் புரிதிரோ? உறுவது புகலும்;
தருவல், இன்று உமக்கு ஏற்றுளது யான்’ எனச் சலித்தான்.
 

இருவிர்   என்னொடு   பொருதிரோ? - (இராம இலக்குவராகிய)
நீங்கள்     இருவரும்   (ஒருசேர   இயைந்து)    என்னுடன்   போர்
செய்கின்றீர்களா?    அன்று   எனின்   ஏற்ற ஒருவர் வந்து உயிர்
தருதிரோ?
  -   அன்றேல்   (ஒருவிர்  ஒருவிராய்த்  தனித்து)  வந்து
உயிரைத்  தருகின்றீர்களா? உம்படையொடும் பொருது  பொன்றுதல்
புரிதிரோ?
 -  (அல்லது)  நுமக்குரிய  (வானர) சேனைகளோடும் கூடி
(என்னுடன்) போர் செய்து இறந்தொழிலைச் செய்கின்றீர்களா?  உறுவது
புகலும்
 -  (இவற்றுள்  ஆற்றலுக்கும்  விருப்பத்திற்கும்) பொருந்துவது
ஒன்றைச் சொல்வீராக;   தருவல்,  இன்று  உமக்கு ஏற்றுளது யான்
எனச் சலித்தான்
- நுமக்கு   ஏற்புடையதொன்றை   இன்று    யான்
தருகின்றேன்  எனச்  சிதைந்து கூறினான் (இந்திரசித்து).
 

                                                  (61)
 

                       இலக்குவன் தன் வஞ்சினம் பற்றிக் கூறுதல்
 

8502.

‘வாளின், திண் சிலைத் தொழிலினின், மல்லினின், மற்றை
ஆளுற்று எண்ணிய படைக்கலம் எவற்றினும், அமரில்