பக்கம் எண் :

 பிரம்மாத்திரப் படலம் 515

8504.

‘இலக்குவன் எனும் பெயர் உனக்கு இயைவதே என்ன,
இலக்கு வன் கணைக்கு ஆக்குவென்; “இது புகுந்து
                                    இடையே
விலக்குவன்” என விடையவன் விலக்கினும், வீரம்
கலக்குவன்; இது காணும், உன் தமையனும் கண்ணால்.
 

இலக்குவன் எனும்  பெயர்  உனக்கு  இயைவதே  என்ன  -
இலக்குவன்  எனும்  பெயர்  உனக்குத்  தக்கதே  என்று  (யாவரும்)
கருதுமாறு;   வன்   கணைக்கு இலக்கு ஆக்குவென்  -  (உன்னை
என்னுடைய)  வலிய அம்பினுக்கு இலக்கு ஆக்குவென்; “இது புகுந்து
இடையே விலக்குவன்” என  விடையவன்  விலக்கினும்
-  (யான்
செய்யும்)   “இப்போரினை   விலக்குவேன்’  எனக்  கூறி  எருதினை
வாகனமாக  உடைய உருத்திர மூர்த்தியே இடையிற் புகுந்து (பொருது)
விலக்கினாலும்;   வீரம்   விலக்குவன்  -  (அவருடைய அத்தகைய)
வீரத்தைத்  தடுத்து  நீக்குவேன்;  உன்  தமையனும் கண்ணால் இது
காணும்
- இதனை (உனது அழிவினை) உன் அண்ணனான இராமனும்
(செயலற்று) கண்களாற் காண்பான்.
 

இது   முதல்  மூன்று  செய்யுட்கள்  ஒரு  தொடாய் அமைந்தன.
‘லக்ஷ்மண’ எனும் வட மொழிச் சொல்லின் திரிபு இலக்குவன் என்பது.
இத்திரிபினையே     முதன்மையாகக்    கொண்டு    இந்திரசித்தின்
அம்பினுக்கு   இலக்கு   ஆகுபவன்   இலக்குவன்  என்று  பொருள்
கொள்ளும்படி இருக்கும் நயம் உணர்ந்து மகிழத் தக்கது. இச்செய்யுள்
முன்னிரண்டடி  ஒரு வகையாகவும், பின்னிரண்டடி ஒரு வகையாகவும்
நின்ற ‘யமகம்’ என்னும் சொல்லணி பெற்றது.
 

                                                  (64)
 

8505.

‘அறுபது ஆகிய வெள்ளத்தின் அரக்கரை அம்பால்,
இறுவது ஆக்கிய இரண்டு வில்லீரும் கண்டு இரங்க,
மறுஅது ஆக்கிய எழுபது வெள்ளமும் மாள,
வெறுவிது ஆக்குவென், உலகை இக் கணத்தின் ஓர்
                                    வில்லால்.

 

அறுபது வெள்ளத்தின் ஆக்கிய அரக்கரை - அறுபது வெள்ளம்
என்னும்    தொகையினராய்    அணிவகுத்து    நிறுத்திய   அரக்க
வீரர்களையெல்லாம்; அம்பால்  இறுவது  ஆக்கிய - அம்புகளினால்
இறந்தொழியும் படி செய்த; இரண்டு வில்லீரும்