பக்கம் எண் :

520யுத்த காண்டம் 

8512.

மெய்யில் பட்டன பட, படாதன எலாம் விலக்கி,
தெய்வப் போர்க் கணைக்கு அத்துணைக்கு அத்துணைச்
                                       செலுத்தி,
ஐயற்கு ஆங்கு இளங் கோளரி, அறிவு இலான் அறைந்த
பொய்யின் போம்படி ஆக்கினன், கடிதினின் புக்கான்.
 

ஐயற்கு    ஆங்கு    இளங்கோளரி   கடிதினின் புக்கான் -
தலைவனாகிய இராமனுக்கு இளைய  வலிய  சிங்கம்  போன்றவனாகிய
இலக்குவன்,   விரைந்து  போர்  செய்ய  முற்பட்டவனாகி;  மெய்யில்
பட்டன பட, படாதன எலாம் விலக்கி
- தன் உடலில் பட்டனவாகிய
அம்புகள் தைத்துத் தோன்ற, தைக்கப்   பெறாதனவாகிய    அம்புகள்
அனைத்தையும் (தனது அம்புகளால்) தடுத்து நீக்கி; தெய்வப் போர்க்
கணைக்கு அத்துணைக்கு அத்துணை  செலுத்தி
 -  (இந்திரசித்தன்
ஏவிய)   தெய்வத்தன்மையுள்ள  அம்புகளுக்கு  அந்தந்த அம்புகளின்
எண்ணிக்கைக்குத் தக அவ்வவற்றைச் செலுத்தி; அறிவிலான் அறைந்த
பொய்யின் போம்படி போக்கினான்
- (அவ்வம்புகள் அனைத்தையும்)
அறிவில்லாதவன்    கூறிய   பொய்மொழிகளை   ஒத்து   விரைவில்
அழிந்தொழியுமாறு விலக்கிப் போக்கினான்.
 

                                                  (72)
 

8513.

பிறகின் நின்றனன் பெருந்தகை, இளவலைப் பிரியான்;
‘அறன் இது அன்று’ என, அரக்கன்மேல் சரம் துரந்து
                                      அருளான்;
இறவு கண்டிலர் இருவரும், ஒருவரை ஒருவர்;
விறகின் வெந்தன, விசும்பிடைச் செறிந்தன விசிகம்.
 

பெருந்தகை  - பெருந்தகைமையை உடையவனாகிய இராமன்; இது
அறன்று   என
 -  (இலக்குவனும்,  இந்திரசித்தும்  தனித்து  நின்று
பெரும்போரில்  தான்  இடையே  புகுந்து  அம்பு தொடுத்தல்) போர்
அறம் ஆகாதென எண்ணி; அரக்கன் மேல் சரம் துரந்து அருளான்
- அரக்கனாகிய இந்திரசித்தன்   மேல்   அம்பு   தொடுக்காதவனாகி;
இளவலைப் பிரியான்  பிறகின்   நின்றனன்   -   இலக்குவனைப்
பிரியாதவனாய்  அவன் பின்புறத்திலேயே வாளா நின்றான்; இருவரும்
ஒருவரை ஒருவர் இறவு கண்டிலர்
-