பக்கம் எண் :

 மாயா சனகப் படலம் 53

புறந்தருதல்  - பாதுகாத்தல் ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே
(புறம் - 312) என  வருதல்  காண்க. போது - விரைவாக, பைய -
மெதுவாக,செய்தியின்
தன்மை கருதிய அச்சத்தால் இவ்வாறு கூறினர்
என்க. சேனை முந்நீர், கவிப் பெருங்கடல் - உருவகங்கள்.

                                                  (75)

                     இராவணன் அழுது அரற்றி நிலத்தில் வீழ்தல்

7707.ஊரொடும் பொருந்தித் தோன்றும் ஒளியவன் என்ன, ஒண்
                                           பொன்
தாரொடும் புனைந்த மௌலி தரையொடும் பொருந்த, தள்ளி,
பாரொடும் பொருந்தி நின்ற மராமரம், பணைகளோடும்
வேரொடும் பறிந்து, மண்மேல் வீழ்வதே போல, வீழ்ந்தான்.

ஊரொடும்    பொருந்தித்  தோன்றும்  ஒளியவன்  என்ன  -
ஊர்கோளோடு   பொருந்தி   விளங்குகிற   கதிரவன்  போல;  ஒண்
பொன்தாரொடும் புனைந்த  மௌலி
- ஒளி பொருந்திய பொன்னால்
ஆகிய மாலைகளினால் அழகு படுத்தப்பட்ட மகுடங்கள்; தரையொடும்
பொருந்தத்  தள்ளி
- பூமியில் சென்று சேரும்படி தள்ளி விட்டுவிட்டு;
பாரொடும் பொருந்தி நின்ற  மராமரம் - நிலத்தில் பொருந்தி நின்ற
மராமரமானது;   பணைகளோடும்   -   தன்  வலிய  கிளைகளோடு;
வேரொடும் பறிந்து  -  வேரொடு பறித்தலுண்டு; மண்மேல் வீழ்வதே
போல  வீழ்ந்தான்
 -  நிலத்தின்  மேல் வீழ்வது போல (இராவணன்)
விழுந்தான்.

ஒண்  பொன்  தாரொடு புனைந்த மௌலிக்கு ஊர்கோளோடு கூடிய
கதிரவன்  உவமையாயிற்று.  இராவணன்   தன்   இருபது  கைகளோடு
நிலத்தில் விழுந்தது - மராமரம்  வேரொடும்  கிளைகளோடும் வீழ்ந்தது
போலும் என உவமை கூறினார். ஒளியவன் - கதிரவன்.

                                                   (76)

7708.பிறிவு எனும் பீழை தாங்கள் பிறந்த நாள் தொடங்கி என்றும்
உறுவது ஒன்று இன்றி, ஆவி ஒன்றென நினைந்து நின்றான்