பக்கம் எண் :

54யுத்த காண்டம் 

எறி வரும் செருவில் தம்பி தன்பொருட்டு இறந்தான் என்ன
அறிவு அழிந்து, அவசன் ஆகி, அரற்றினன், அண்டம் முற்ற.

தாங்கள் பிறந்த  நாள்  தொடங்கி - தாங்கள் ஒன்றாகப் பிறந்த
நாள்  தொடங்கி;  பிறிவு  எனும்  பீழை - பிரிவு என்கின்ற துன்பம்;
என்றும் உறுவது ஒன்று இன்றி  -  எப்பொழுதும்  நேருதல்  (என்ற)
ஒன்று  இல்லாமையால்;  ஆவி  ஒன்றென  நினைந்து  நின்றான் -
(இருவருக்கும் உடல்  இரண்டு) உயிர் ஒன்று என நினைத்திருந்தவனான
இராவணன்;  எறி  வரும்  செருவில் - படைக்  கலங்களை   எறிந்து
செய்யும் போரில்;   தம்பி  தன்   பொருட்டு  இறந்தான் என்ன -
கும்பகருணன்  தனக்காக  இறந்தான்  என்பதைத்  (தூதுவர்)  சொல்லக்
கேட்டு; அறிவு  அழிந்து -  அறிவு  கெட்டு; அவசன் ஆகி - துக்கம்
மிக்கவனாகி; அண்டம் முற்ற  அரற்றினன்  - அண்டத்தளவு சென்று
சேருமாறு பெருங்குரல் எடுத்து அரற்றத் தொடங்கினான்.

பிறிவு  - பிரிவு, ரகரம் எதுகை நோக்கி றகரமாகத் திரிந்தது. பீழை -
துன்பம்.  ஆவி  ஒன்றென  நினைந்து  நின்றான்,  உயிர்  ஒன்றாகிய
செயிர் தீர் கேண்மை. இருதலைப் புள்ளின் ஓருயிரன்ன நிலை என்க.

                                                  (77)

கலி விருத்தம்

7709.தம்பியோ! வானவர் ஆம் தாமரையின் காடு உழக்கும்
தும்பியோ! நான்முகத்தோன் சேம்மதலை தோன்றாலோ!
நம்பியோ! இந்திரனை நாமப் பொறி துடைத்த
எம்பியோ! யான் உன்னை இவ் உரையும் கேட்டேனோ!

தம்பியோ   - (நீ எனக்குத்) தம்பி மட்டும் தானா? வானவர் ஆம்
தாமரையின்  காடு    உழக்கும்   தும்பியோ
  -   தேவர்களாகிய
தாமரைக்காட்டைக்  கலக்கி   அழிக்கவல்ல   மதயானை போன்றவனே;
நான்முகத்தோன் சேம் மதலை  தோன்றாலோ - நான்கு முகங்களை
உடைய  பிரமன்  மகனாகிய  புலத்தியன்   மகனான  விச்சிராவசுவின்
வழித்  தோன்றியவனே;  நம்பியோ  - ஆடவர் திலகனே; இந்திரனை
நாமப்பொறி துடைத்த எம்பியோ
-