பக்கம் எண் :

56யுத்த காண்டம் 

7711.‘வல் நெஞ்சின் என்னை நீ நீத்துப் போய், வான்
                              அடைந்தால்,
இன்னம் சிலரோடு ஒரு வயிற்றின் யார் பிறப்பார்?
மின் அஞ்சும் வேலோய்! விழி அஞ்ச வாழ்கின்றார்,
தம் நெஞ்சம் தாமே தடவாரோ, தானவர்கள்?

 

மின்  அஞ்சும் வேலோய் - மின்னலும் அஞ்சும்படி ஒளி வீசுகின்ற
வேல்  படையை  உடையவனே;  என்னை நீ வன் நெஞ்சின் நீத்துப்
போய்
- என்னை நீ வலிய நெஞ்சுடையவனாக விட்டுப் போய்,; வான்
அடைந்தால்
 -  வீரர்  உலகு  அடைந்தால்;  இன்னம்  - இனிமேல்;
சிலரோடு ஒரு வயிற்றின்  பிறப்பார்  யார்  - சிலருடன் ஒரு (தாய்)
வயிற்றில்  பிறக்க  (விரும்புபவர்)  யார்? விழி அஞ்ச வாழ்கின்றார் -
கண்  (எதிரில்  வர)  அஞ்சி  வாழ்கின்றவர்களாகிய;  தானவர்கள்  -
தனுவின் வழி வந்த அசுரர்கள்; தம் நெஞ்சம் தாமே தடவாரோ - தம்
மார்பைத் தாமே தடவிக் கொண்டு வரமாட்டார்களா?
 

வன்நெஞ்சில்     - என்னைப் பிரியாமல் இருந்த நீ இப்போது கல்
நெஞ்சனாய்  என்னைப்  பிரிந்தாய். வான் - வீர சுவர்க்கம், நெஞ்சம்
தடவல்  -  தன்  பகை  போய்விட்டது  எனச்  செருக்கி நெஞ்சைத்
தடவுதல்.
 

                                                  (80)
 

7712.‘கல் அன்றோ, நீராடும் காலத்து, உன் கால் தேய்க்கும்-
மல் ஒன்று தோளாய்!-வட மேரு? மானுடவன்
வில் ஒன்று நின்னை விளிவித்துளது என்னும்
சொல் அன்றோ என்னைச் சுடுகின்றது, தோன்றால்!

 

மல்   ஒன்று தோளாய் - (மற்போர்) வலி பொருந்திய தோள்களை
உடையவனே;  வடமேரு  -  வடக்கில்  உள்ள  மேருமலை;  நீராடும்
காலத்து
 - (நீ)  நீராடும்  பொழுது;  உன்  கால்  தேய்க்கும் - உன்
பாதத்தை   (அழுக்குப்  போகும்படி)  தேய்ப்பதற்கு;  கல் அன்றோ -
(பயன்படும்) கல் அல்லவா?  தோன்றால் - ஆடவர்களில் சிறந்தவனே;
மானுடவன்  வில்  ஒன்று - (அத்தகு வலியுடை) உன்னை மனிதனின்
வில்லில் (இருந்து வந்த) அம்புகளில்  ஒன்று,; விளித்துளது என்னும் -
இறக்குமாறு   செய்தது   என்கின்ற;   சொல்   அன்றோ  என்னைச்
சுடுகின்றது
  -  சொல்  அல்லவா  என்னை  மிகவும்  வருத்தப்படச்
செய்கின்றது.
 

                                                   (81)