பக்கம் எண் :

 பிரம்மாத்திரப் படலம் 565

உடல்களும், உதிர நீரும், ஒளிர் படைக்கலமும், உற்ற
கடல்களும், நெடிய கானும், கார் தவழ் மலையும்,
                                     கண்டான்.
 

மடல்  கொளும் அலங்கல் மார்பன் - இதழ்களை உடைய மலர்
மாலையை அணிந்தவனான இலக்குவன்; மிடல் கொளும் பகழி மாரி -
வன்மை  பொருந்திய  அம்பு  மழையினை;  வானினும் மும்மை வீசி
மலைந்திட
 - மேகத்தைக் காட்டிலும் மூன்று மடங்கு சொரிந்து போர்
செய்தமையால்;    உலைந்து   மாண்டார்   -உயிர்   நீங்கியவராகிய
அரக்கரின்; உடல்களும்   உதிர   நீரும்   ஒளிர்படைக்கலமும் -
உடல்களும்,   இரத்தப்  புனலும்,  ஒளி செய்கின்ற போர்க்கருவிகளும்
உற்ற -  பொருந்திய  (அவற்றாலாகிய);  கடல்களும்  நெடிய கானும்
கார்தவழ் மலையும் கண்டான்
- கடல்களையும், பரந்த காட்டினையும்
மேகந்தவழ்கின்ற மலையையும் (அனுமன்) கண்டான்.
 
 

                                                 (150)
 

8591.சுழித்து எறி ஊழிக் காலின் துருவினன் தொடரும்
                                      தோன்றல்,
தழிக் கொண்ட குருதி வேலை தாவுவான், ‘தனிப் பேர்
                                        அண்டம்
கிழித்தது, கிழித்தது’ என்னும் நாண் உரும்ஏறு கேட்டான்;
அழித்து ஒழி காலத்து ஆர்க்கும் ஆர்கலிக்கு இரட்டி
                                      ஆர்த்தான்.
 
 

சுழித்து  எறி ஊழிக்காலின் - (எல்லாப்பொருள்களையும்) சுழற்றி
வீசும்   யுகமுடிவுக்   காலத்தின்   பெருங்காற்றுப்போல;  துருவினன்
தொடரும்  தோன்றல்
 - (இலக்குவனைத்) தேடிச் செல்லும் பெருமை
மிக்கவனாகிய அனுமன்; தழிக்கொண்ட குருதி வேலை தாவுவான் -
(நாற்புறத்தும்)  வளைத்துக்  கொண்டுள்ள குருதி நீர்க்கடலைத் தாவிக்
கடந்து செல்லுபவன்; தனிப்பேர்  அண்டம்  கிழித்தது,  கிழித்தது
என்னும்
- தனித்துள்ள இப்பெரிய அண்டத்தைக் கிழித்தது கிழித்தது
என்னும்படியாக   (எழுந்த)!   நாண்   உரும்   ஏறு கேட்டான்  -
(இலக்குவனது)   வில்   நாணின்   ஒலியாகிய   இடி   ஓசையினைக்
கேட்டவனாகி; அழித்து  ஒழி   காலத்து  ஆர்க்கும்  -  (எல்லாப்
பொருள்களையும்)   அழித்தொழிக்கின்ற   ஊழி   முடிவுக்காலத்தில்
ஆரவாரித்து