பக்கம் எண் :

566யுத்த காண்டம் 

(ப்பொங்கி) எழும்;  ஆர்கலிக்கு  இரட்டி  ஆர்த்தான்  -  கடலைக்
காட்டிலும் பெருமுழக்கம் செய்தான்.
 

                                                 (151)
 

     அனுமனைத் தழுவி, இலக்குவன் சேனையின் நிலைமை உசாவுதல்
 

8592.ஆர்த்த பேர் அமலை கேளா, அணுகினன் அனுமன்; ‘எல்லா
வார்த்தையும் கேட்கல் ஆகும்’ என்று, அகம் மகிழ்ந்து,
                                          வள்ளல்
பார்ப்பதன் முன்னம் வந்த வணங்கினன், விசயப் பாவை
தூர்த்தனை; இளைய வீரன் தழுவினன், இனைய சொன்னான்:

 

ஆர்த்த   பேர்  அமலைகேளா  -  ஆரவாரித்த  (அனுமனின்)
பேரொலியினைக்  கேட்டு; ‘அனுமன் அணுகினன்’ - அனுமன் (இங்கு)
வந்து சேர்ந்தான்;  எல்லாவார்த்தையும்  கேட்கல் ஆகும் - (அவன்
வாயிலாக)  எல்லோருடைய  செய்திகளையும்  கேட்டறியலாம்; என்று
அகம்  மகிழ்ந்து  
-  என்று  தன்னுள்ளத்தே மகிழ்ச்சியுற்று; வள்ளல்
பார்ப்பதன்  முன்னம்
 -  வள்ளன்மையுடையோனாகிய  இலக்குவன்,
(அவ்வனுமனைத்    திரும்பிப்)    பார்ப்பதற்கு   முன்னே;   வந்து
வணங்கினன்
 -  (அவன்  இலக்குவனை)  அடைந்து  வணங்கினான்;
இளையவீரன்   -   (இராமனுக்கு)  இளைய  வீரனாகிய  இலக்குவன்;
விசயப்பாவை தூர்த்தனை  -  வெற்றி மங்கையைக் காமுற்றவனாகிய
அனுமனை;  தழுவினன்    இனைய   சொன்னான்   -   தழுவிக்
கொண்டவனாய் (ப்பின்வருமாறு) இவ்வார்த்தைகளைக் கூறினான்.
 
 

விசயப்பாவை   - வெற்றி மங்கை, தூர்த்தன் - காமுகன், அனுமன்.
அனுமன் நைட்டிக பிரம்மசாரியாக இருந்தும் பலரும் தழுவிய வெற்றி
மங்கையை  அவனும்  தழுவியதாகக்  கொண்டு அவனைத் தூர்த்தன்
எனக்  கூறிய  நயம் உணர்ந்து மகிழ்தற்பாலது. பலருந்தழுவியவளைக்
காமுகனையன்றிப் பிறர் தழுவாராதலின் தூர்த்தன் என்றார்.
 

                                                (152)
 

8593.‘அரி குல வீரர், ஐய! யாண்டையர்? அருக்கன் மைந்தன்
பிரிவு உனைச் செய்தது எவ்வாறு? அங்கதன்
                              பெயர்ந்தது எங்கே?