| விரி இருள் பரவைச் சேனை வெள்ளத்து விளைந்தது ஒன்றும் தெரிகிலென்; உரைத்தி’ என்றான். சென்னிமேல் கையன் சொல்வான். |
ஐய! அரிகுல வீரர் யாண்டையர்? - ‘தலைமை சான்றவனே! (அனுமனே) குரக்குக் குலத்து வீரர்கள் எவ்விடத்தே உள்ளார்கள்? அருக்கன் மைந்தன் பிரிவு உனைச் செய்தது எவ்வாறு? - சூரியன் மகனான சுக்ரீவன் உன்னை விட்டுப் பிரிந்து சென்றது எவ்வாறு? அங்கதன் பெயர்ந்தது எங்கே? - அங்கதன் சென்றது எங்கே? விரிஇருள் பரவைச் சேனை வெள்ளத்து - பரந்த இருட்கடலில் கலந்த சேனை வெள்ளத்தில்; விளைந்தது ஒன்றும் தெரிகிலென் உரைத்தி என்றான் - நிகழ்ந்த செயல் எதையும் அறிந்திலேன், (இவற்றை விளங்கச்) சொல்வாயாக என (இலக்குவன்) வினவினான்; சென்னிமேல் கையன் சொல்வான் - (அது கேட்ட அனுமன்) தலைமேல் குவித்த கையனாய் (ப்பின் வருமாறு மறுமொழி) கூறுவானாயினன். |
(153) |
அனுமன் மறுமொழி |
| 8594. | ‘போயினார் போயவாறும், போயினது அன்றிப் போரில் ஆயினார் ஆயது ஒன்றும், அறிந்திலென், ஐய! யாரும் மேயினார் மேய போதே தெரிவது, விளைந்தது’ என்றான்- தாயினான் வேலையோடும் அயிந்திரப் பரவைதன்னை. |
வேலையோடும் அயிந்திரப் பரவைதன்னைத் தாயினான் - கடலுடன் ஐந்திரவியாகரணமாகிய கடலையும் கடந்தவனாகிய அனுமன்; ஐய! போயினார் போயவாறும் போயினது அன்றி - (இலக்குவனை நோக்கி) தலைவனை! போர்மேற் சென்றவர்களாகிய அவர்கள் (தம்மை எதிர்த்த பகைவர்களைத் தொடர்ந்து) போயினதைத் தவிர; போரில் ஆயினார் ஆயது ஒன்றும் அறிந்திலென் - போரில் ஈடுபட்டோராகிய அவர்களிடையே நிகழ்ந்த செய்தி எதுவும் அறியப் பெற்றிலேன்; யாரும் மேயினார் மேயபோதே - (போரில்) பொருந்தியவர்களாகிய அவர்கள் |