யாவரும் (இங்கு மீண்டு) வந்தபோது தான்; விளைந்தது தெரிவது’ என்றான் - (அங்கு) நிகழ்ந்தவற்றை அறிதல் கூடும்’ என்று கூறினான். | (154) | | 8595. | ‘மந்திரம் உளதால், ஐய! உணர்வுறும் மாலைத்து; அஃது உன் சிந்தையின் உணர்ந்து, செய்யற்பாற்று எனின், செய்தி; தெவ்வர் தந்திரம்அதனைத் தெய்வப் படையினால் சமைப்பின் அல்லால், எந்தை! நின் அடியர் யாரும் எய்தலர், நின்னை’ என்றான். | ஐய!, உணர்வுறும் மாலைத்து மந்திரம் உளது - ‘ஐயனே! (பகைவரது மாயையாற் பொருந்திய மயக்கம் நீங்கி) நல்லுணர்வினை அடையச் செய்யும் இயல்பினதாகிய உபாயம் ஒன்று உள்ளது; அஃது உன் சிந்தையின் உணர்ந்து - அதனை நின் மனத்தின் கண்ணே ஆராய்ந்து தெளிந்து; செய்யற்பாற்று எனின், செய்தி - (இப்பொழுது) செய்யத்தக்கதாயின் அதனைச் செய்வாயாக; தெவ்வர் தந்திரம் இதனை - பகைவருடைய சூழ்ச்சித்திறமாகிய இம்மயக்கத்தினை; தெய்வப்படையினால் சமைப்பின் அல்லால் - தெய்வத்தன்மை வாய்ந்த அத்திரங்களால் செய்தால் அன்றி; எந்தை! நின் அடியர் யாரும் எய்தலர் நின்னை’ என்றான் - எந்தையே நின் அடித்தொண்டராகிய வானரவீரர்கள் எவரும் (மயக்கந்தெளிந்து) நின்னை வந்தடையும் ஆற்றலுடையவர் அல்லர்’ என (அனுமன் இலக்குவனுக்கு) கூறினான். | (155) | இலக்குவன் சிவன்படை தொடுத்தல் | | 8596. | ‘அன்னது புரிவென்’ என்னா, ஆயிர நாமத்து அண்ணல்- தன்னையே வணங்கி வாழ்த்தி, சரங்களைத் தெரிந்து தாங்கி, பொன் மலை வில்லினான்தன் படைக்கலம் பொருந்தப் பற்றி, மின் எயிற்று அரக்கர்தம்மேல் ஏவினான்-வில்லின் செல்வன். |
|
|
|