பக்கம் எண் :

 மாயா சனகப் படலம் 57

7713.‘மாண்டனவாம், சூலமும், சக்கரமும், வச்சிரமும்;
தீண்டினவா ஒன்றும் செயல் அற்றவாம்; தெறித்து,
மீண்டனவாம்; மானிடவன் மெல் அம்பு மெய் உருவ,
நீண்டனவாம், தாம் இன்னம் நின்றாராம், தோள் நோக்கி!

 

மாண்டனவாம்     - மாட்சிமைப்பட்டதாகிய; சூலமும் - (சிவனது)
சூலாயுதமும்;   சக்கரமும்   -  (திருமாலுக்கு  உரிய)  சக்கராயுதமும்;
வச்சிரமும்   -  (இந்திரனது)  வச்சிராயுதமும்;  தீண்டினவா  ஒன்றும்
செயல்   அற்றவாம்
  -  (முன்பு)  உன்மீது  தீண்டினவாகி  ஒன்றும்
செய்யமுடியாது  செயல்  அற்றுத்; தெறித்து மீண்டனவாம் - தெறித்து
(அப்பால்)  போய்விட்டன;  மானிடவன்  மெல் அம்பு - (இப்போதே)
மனிதன் எய்த மென்மையான அம்புகள்; மேய் உருவ நீண்டனவாம் -
(உன்)  உடம்பைத்  துளைக்கும்படி  நீண்டு  (வலியொடு)  வந்தனவாம்;
தாம்   இன்னம்   நின்றாராம்  தோள்  நோக்கி  -  இந்நிலையில்
இராவணன் இன்னும்கூடத்  தன்தோளைப் பார்த்துக் கொண்டிருந்தாராம்.
(என்னே இது)
 

மெல்லம்பு     - மானிடன் விடும் அம்பின் வலிமைக் குறைவையும்
இழிவையும்   சுட்டி  நின்றது.  மாண்டனவாம்  - மழுங்கின  எனினும்
அமையும். தாம் - இராவணன் தன்னைப் படர்க்கையாகக் கூறியது.
 

                                                  (82)
 

7714.‘நோக்கு அறவும் எம்பியர்கள் மாளவும், இந் நொய்து
                                    இலங்கை
போக்கு அறவும், மாதுலனார் பொன்றவும், என் பின்
                                   பிறந்தாள்
மூக்கு அறவும், வாழ்ந்தேன்-ஒருத்தி முலைக் கிடந்த
ஏக்கறவால்; இன்னம் இரேனோ, உனை இழந்தும்?
 

எம்பியர்கள்     நோக்கு அறவும் மாளவும் - என் தம்பியர்கள்
பார்ப்பதற்குக்  கூட  இல்லாமல் இறந்து படவும்; இ இலங்கை நொய்து
போக்கு  அறவும்
 -  இந்த இலங்கை எளிமையாக (பகைவர் கையில்)
பட்டு  விடவும்;  மாதுலனார்  பொன்றவும்  -  மாமனாகிய  மாரீசன்
இறக்கவும்;  என்பின்   பிறந்தாள்   மூக்கு   அறவும்  -  என்பின்
பிறந்தவளாகிய (சூர்ப்பநகை) மூக்கை இழக்கவும்,; ஒருத்தி முலைக்