தேவர்க்கும் தேவன் தம்பி - தேவாதி தேவனாகிய இராமபிரானின் தம்பியாகிய இலக்குவன்; யாவர்க்கும் தீது இலாமை - (தன் சேனையிலுள்ளார்) யாவர்க்கும் எவ்வித இடையூறும் நேராத தன்மையினை; கண்டு கண்டு உவகை ஏற - விடாமல் பார்த்து மகிழ்ச்சி மிகக் கொண்டவனாய்; திருமனத்து ஐயம் தீர்ந்தான் - (தான் முன்புகொண்ட) சந்தேகம் தீர்ந்தவனாகி; காவல் போர்க் குரங்கின் சேனை - (தனது) காவலிற் போர் புரியும் குரங்குப்படை; கடல் எனக் கலந்து புல்ல - கடல் போலத்திரண்டு (தன்னை) நெருங்கி நிற்க; இமையோர் பூவர்க்கம் தூவ - வானவர் மலர்வகைகளைத் தூவ; பொலிந்தனன் - விளங்கி நின்றான்; தூதர் போனார் - தூதர்கள் (இச்செய்தியினைக் கூற இராவணனிடம்) சென்றனர்.
(159)
தூதர் இராவணனுக்கும் இந்திரசித்திற்கும் செய்தி கூறுதல்