பக்கம் எண் :

572யுத்த காண்டம் 

இராவணன்)  அப்படியானால்  அரக்கர்  சேனை  எல்லாம்  அழிவது
நிகழ்ந்திருக்கும் என உடன்பட்டு உரைத்தான்.
 

                                                 (160)
 

8601.‘வந்திலன் இராமன்; வேறு ஓர் மலை உளான்; உந்தை,
                                          மாயம்
தந்தன தீர்ப்பான் போனான், உண்பன தாழ்க்க; தாழா
எந்தை! ஈது இயன்றது’ என்றார். ‘மகோதரன் யாண்டை?’
                                          என்ன,
‘அந்தரத்திடையன்’ என்றார். இராவணி, ‘அழகிற்று!’
                                        என்றான்.
 

இராமன்  வந்திலன்  -   இராமன்   (போர்   நிகழுமிடத்திற்கு)
வந்தானல்லன்; வேறு  ஓர்  மலை  உளான்  -  (அவன்) வேறு ஓர்
மலையினிடத்தே  தங்கியிருக்கின்றான்;  மாயம்  தந்தன  தீர்ப்பான்
உந்தை
   -    நாம்பகைவர்   மாட்டுச்   செய்கின்ற   மாயைகளை
(அவர்களுக்கு   முன்னறிவிப்புச்  செய்து)  தீர்ப்பவனாகிய உன் சிறிய
தந்தை; உண்பன   தாழ்க்கப்  போனான்  -  (வானர  சேனைகள்)
உண்ணுதற்கு   உரியனவாகிய   உணவுகள்   வரத்  தாழ்த்தமையால்
(அவற்றைக்) கொணர்தற்குப்  (புறத்தே)  போயினான்; ‘தாழா எந்தை!
ஈது  இயன்றது’ என்றார்
-  (செயலாற்றுவதில்) காலந்தாழாத எந்தை
போல்பவனே! இதுவே (போர்க்களத்தில்) நிகழ்ந்ததாம் எனத் தூதர்கள்
கூறினர்; ‘மகோதரன் யாண்டை?’ என்ன - (அதனைக் கேட்ட இந்திர
சித்து        ‘மகோதரன்       எவ்விடத்துள்ளான்?     எனவினவ;
‘அந்தரத்திடையன்’  என்றார்    -    ‘அவன்   ஆகாயத்திடத்தே
மறைந்தனன்’    என   (தூதர்)க்  கூறினர்;  இராவணி  ‘அழகிற்று’
என்றான்
- இந்திரசித்து  (மகோதரன்  செயல்) ‘அழகாயிருக்கிறது என
(இகழ்ந்து) கூறினான்.
 
 

                                                 (161)
 

                 இந்திரசித்தன் பிரமாத்திரம் ஏவ வேள்வி செய்தல்
 

கலித்துறை
 

8602. ‘காலம் ஈது’ எனக் கருதிய இராவணன் காதல்.
ஆல மா மரம் ஒன்றினை விரைவினில் அடைந்தான்;
மூல வேள்விக்கு வேண்டுவ கலப்பைகள் முறையால்
கூலம் நீங்கிய இராக்கதப் பூசுரர் கொணர்ந்தார்.