பக்கம் எண் :

 பிரம்மாத்திரப் படலம் 575

யாகத்தீ      வலமாகச்    சுழன்று    எழுவது    நற்சகுனமாகக்
கொள்ளப்பட்டது.  எனவே,  இந்திரசித்து  தனக்கு வெற்றி கிடைப்பது
உறுதி என எண்ணியவனாய் வானில் உயர்ந்தான் என்பதாம்.
 
 

அரக்கர் குலமாகிய   ஊற்றுச்   சுரந்த  கொடுமையின்  வடிவமாக
இந்திரசித்து வர்ணிக்கப் பெறுகின்றான். நிலம் - போர்க்களம்.
 
 

                                                 (164)
 

8605.விசும்பு போயினன், மாயையின் பெருமையான்; மேலைப்
பசும் பொன் நாட்டவர் நாட்டமும் உள்ளமும் படரா,
அசும்பு விண்ணிடை அடங்கினன், முனிவரும் அறியாத்
தசும்பு நுண் நெடுங் கோளொடு காலமும் சார.

 

மாயையின் பெருமையான்- (யாவரையும் மயக்குந் தன்மையாகிய)
மாயத்தின்  மிகுதியை   உடையவனாகிய  இந்திரசித்து;  தசும்பு நுண்
நெடுங்கோளொடு காலமும்    சார
   -   (வானப்பெருவெளியில்)
அசையுந்தன்மையனவாகிய    நுண்ணிய     நீண்ட   கோள்களுடன்
(வெற்றியைத்  தரும்)   காலமும்   சேர;  விசும்பு   போயினன்  -
ஆகாயத்தில்  சென்றவனாகி;  மேலைப்   பசும்பொன்   நாட்டவர்
நாட்டமும் உள்ளமும் படரா
 -  மேலேயுள்ள பசிய பொன்மயமான
துறக்க   உலகத்தவராகிய   தேவர்களுடைய  கண்களும்  உள்ளமும்
(ஊடுருவிச்)  செல்ல  முடியாத; அசும்பு விண்ணிடை அடங்கினன் -
நீர்த்திவலையை  உடைய  வானத்திடையிலே நுண்ணுருவுடையவனாய்
ஒடுங்கினான்;  முனிவரும்   அறியார்   -  (அவனது  இருப்பினை)
முனிவர்களும் அறிய முடியாதவராயினர்.
 
 

                                                 (165)
 

                      மகோதரன் இந்திரவடிவுடன் வந்து பொருதல்
 

8606.அனையன் நின்றனன்; அவ் வழி, மகோதரன் அறிந்து,
                                           ஓர்
வினையம் எண்ணினன், இந்திர வேடத்தை மேவி,
துனை வலத்து அயிராவதக் களிற்றின்மேல் தோன்றி,
முனைவர் வானவர் எவரொடும் போர் செய மூண்டான்.
 

அனையன்  நின்றனன்   -   அத்தன்மையனாகிய   இந்திரசித்து
(வானகத்து   உருக்கரந்து)   நின்றான்; அவ்வழி மகோதரன் அறிந்து