ஓர் வினையம் எண்ணினன் - அப்போது மகோதரன் அதனை அறிந்து ஒரு சூழ்ச்சிச் செயலைச் செய்ய எண்ணியவனாய்; இந்திர வேடத்தை மேவி - இந்திரனது உருவத்தைத்தான் மேற்கொண்டு; துனைவலத்து அயிராவதக் களிற்றின் மேல் தோன்றி - வேகமும் வலிமையுங் கொண்ட ஐராவதக் களிற்றின் மேல் தோன்றி; முனைவர் வானவர் எவரொடும் போர் செய மூண்டான் - முனிவர் தேவர் முதலியவர்களோடும் போர் புரிய முனைந்தெழுந்தான். |
அஃதாவது தேவர் முனிவர் முதலானோரும் அறிய முடியாதபடி மறைந்து நின்ற இந்திரசித்து என்றவாறு, வினையம் - சூழ்ச்சிச் செயல். துனைவு - விரைவு; வேகம். வலம் - வன்மை, அயிராவதம் - ஐராவதம் - இந்திரனுக்குரிய வாகனமாகிய வெள்ளையானை. இந்திரசித்தன் மறைந்து நின்றமையை ‘பாம்பறியும் பாம்பின் கால்’ என்பது போல மகோதரன் தன்மாயை வன்மையால் உணர்ந்தனன் என்க. |
மகோதரன் சூழ்ச்சி - வெற்றிக்களிப்பில் மூழ்கி ஆரவாரித்து நின்ற வானரப்படையைத் திகைப்படையச் செய்தல். இதனால் தோன்றும் குழப்பம் இந்திரசித்தனின் முயற்சிக்கு (பிரமாத்திரம் விடுதற்கு)ப் பெரிதும் துணை நிற்கும். என்ன நிகழ்ந்தது என இலக்குவன் முதலானோர் உணராமுன்னமே அவர்களை வீழ்த்திவிட வேண்டும் என்பது நோக்கம். அலதேல் அவ்விலக்குவன் இந்திர சித்தனின் பிரமாத்திரத்தைத் தடுத்துவிடுதலும் கூடுமாதலின் என்க. |
(166) |
| 8607. | ‘அரக்கர், மானிடர், குரங்கு, எனும் அவை எலாம் அல்லா உருக்கள் யா உள, உயிர் இனி உலகத்தின் உழல்வ, தருக்கும் போர்க்கு வந்தனவாம்’ எனச் சமைத்தான்; வெருக்கொளப் பெருங் கவிப் படை குலைந்தது, விலங்கி, |
அரக்கர் மானிடர் குரங்கு எனும் அவை எல்லாம் அல்லா - (தன் இனத்தவராகிய) அரக்கரும் (பகைவர் இனத்தவராகிய) மனிதரும் குரங்கும் ஆகிய அவை அல்லாத; உருக்கள் யாவுள உயிர் இனி உலகத்தின் உழல்வ - உருவங்களை உடையவாய் இவ்வுலகத்தில் திரிவனவாகிய உயிரினங்கள் யாவை உள்ளன. அவை எல்லாமும் (இப்பொழுது); தருக்கும் போர்க்கு வந்தனவாம் எனச் சமைத்தான் - (இலக்குவன் முதலானோரோடு) செருக்கிச் செய்யும் போர்க்கு (துணைசெய்ய) வந்துள்ள எனக் கண்டோர் கருதும்படி (மகோதரன்தன் மாயத்தால்) படைத்துக் காட்டினான்; |