வெருக்கொளப் பெருங் கவிப்படை குலைந்தது விலங்கி - (அதுகண்டு) பெரிய வானர சேனை அச்சங்கொண்டு நிலை கெட்டுப் பின் வாங்கியது. |
(167) |
8608. | ‘கோடு நான்குடைப் பால் நிறக் களிற்றின்மேல் கொண்டான் ஆடல் இந்திரன்; அல்லவர் யாவரும் அமரர், சேடர், சிந்தனை முனிவர்கள்; அமர் பொரச் சீறி, ஊடு வந்து உற்றது என்கொலோ, நிபம்?’ என உலைந்தார். |
கோடு நான்குடைப்பால் நிறக் களிற்றின் மேல் கொண்டான் - நான்கு தந்தங்களை உடைய பால் போன்ற வெண்ணிற யானை மேல் ஏறி வருபவன்; ஆடல் இந்திரன்; அல்லவர் யாவரும் அமரர் - வலிமை வாய்ந்த இந்திரன் (அவனைச் சூழ்ந்துள்ள) ஏனையோர் தேவர்கள்; சேடர் சிந்தனை முனிவர்கள் - எஞ்சியோர் இறைவனை எண்ணியிருக்கின்ற முனிவர்கள்; அமர் பொரச் சீறி - இங்ஙனம் வானுலகவர் (நம்மீது பகையுடன்) போர் செய்தற்குச் சீற்றங்கொண்டு; ஊடு வந்து உற்றது என்கொலோ நிபம்? என உலைந்தார் - (இப்போர்க்களத்தின்) இடையே வந்து சேர்ந்தது எக்காரணத்தினாலோ’ என (வானரர் திகைப்புற்று) வருந்தினர். |
(168) |
இலக்குவன், அனுமனை முனிவர் முதலியோர் பொரும் காரணம் வினவல் |
8609. | அனுமன் வாள் முகம் நோக்கினன், ஆழியை அகற்றித் தனு வலம் கொண்ட தாமரைக் கண்ணவன்தம்பி, ‘முனிவர் வானவர் முனிந்து வந்து எய்த, யாம் முயன்ற துனி இது என்கொலோ? சொல்லுதி, விரைந்து’ எனச் சொன்னான். |
ஆழியை அகற்றித் தனுவலம் கொண்ட - சக்கரப்படையை நீக்கி வில்லை வலக்கையிற் கொண்ட; தாமரைக் கண்ணவன் தம்பி - செந்தாமரை மலர் போலும் கண்களை உடைய இராமபிரானின் தம்பியாகிய இலக்குவன்; அனுமன் வாள் முகம் |