நோக்கினன் - அனுமனது ஒளிபொருந்திய முகத்தை நோக்கியவனாய்; முனிவர் வானவர் முனிந்து வந்து எய்த - முனிவர்களும் தேவர்களும் சினந்து ‘(நம்முடன் போர் செய்ய) வருமாறு; யாம் முயன்ற துனி இது என்கொலோ - நாம் செய்த வெறுக்கத்தக்க குற்றம் யாதோ? சொல்லுதி உணர்ந்து எனச் சொன்னான் - ஆராய்ந்து கூறுவாயாக” என்று கூறினான். |
(169) |
இந்திரசித்தன் பிரமாத்திரத்தை இலக்குவன் மேல் விடுதலும் அதன் விளைவுகளும் |
8610. | இன்ன காலையின் இலக்குவன் மேனிமேல் எய்தான், முன்னை நான்முகன் படைக்கலம்; இமைப்பதன் முன்னம், பொன்னின் மால் வரைச் குரீஇஇனம் மொய்ப்பது போல, பன்னல் ஆம் தரம் அல்லன சுடர்க் கணை பாய்ந்த. |
இன்ன காலையின் - இவ்வாறு (அனுமனை நோக்கி இலக்குவன்) வினவும் நேரத்தில்; முன்னை நான் முகன் படைக்கலம் - (இந்திரசித்து) காலத்தால் முற்பட்ட முதியவனாகிய பிரமதேவனது படைக்கலத்தை; இமைப்பதன் முன்னம் - ஓர் இமைப்பொழுதிற்குள்; இலக்குவன் மேனி மேல் எய்தான் - இலக்குவனது உடலின் மீது செலுத்தினான்; பொன்னின் மால் வரைக்குரீஇ இனம் மொய்ப்பது போல - பொன் மயமான பெரிய மலையின் மீது குருவிக் கூட்டங்கள் மொய்ப்பதைப் போன்று; பன்னல் ஆம் தரம் அல்லன சுடர்க்கணை பாய்ந்த - சொல்லும் தன்மைய வல்லாத ஒளிமிக்க அம்புகள் (இலக்குவனது மேனியிற்) பாய்ந்து தைத்தன. |
(170) |
8611. | கோடி கோடி நூறாயிரம் சுடர்க் கணைக் குழாங்கள் மூடி மேனியை முற்றுறச் சுற்றின மூழ்க, ஊடு செய்வது ஒன்று உணர்ந்திலன், உணர்வு புக்கு ஒடுங்க, ஆடல் மாக் கரி சேவகம் அமைந்தென, அயர்ந்தான். |
கோடி, கோடி நூறாயிரம் சுடர்க் கணைக் குழாங்கள் - கோடி கோடி நூறாயிரம் என்னும் தொகையினவாகிய ஒளி படைத்த |