பக்கம் எண் :

 பிரம்மாத்திரப் படலம் 579

அம்பின்  தொகுதிகள்; மேனியை மூடி  முற்றுறச் சுற்றின் மூழ்க -
(இலக்குவனது)  மேனியை  முழுவதுமாக மூடி மறைத்துத் தைக்க; ஊடு
செய்வத ஒன்று  உணர்ந்திலன்
 -  அவ்விடை  நேரத்தில் இன்னது
செய்வது என்று  ஒன்றும்  உணராதவனாகி; உணர்வு புக்கு ஒடுங்க -
தன்னுணர்வு  உள்ளே   சென்று  ஒடுங்க;  ஆடல்மாக்கரி  சேவகம்
அமைந்தென  அயர்ந்தான்
 -  வலிய  பெரிய  யானையானது தான்
துயிலுமிடத்தில் அயர்ந்து துயில் கொண்டாற்போன்று அயர்ந்தான்.
 
 

                                                 (171)
 

8612.

அனுமன், ‘இந்திரன் வந்தவன் என்கொல், ஈது அமைந்தான்?
இனி என்? எற்றுவென் களிற்றினோடு எடுத்து’ என
                                       எழுந்தான்;
தனுவின் ஆயிர கொடி வெங் கடுங் கணை தைக்க,
நினைவும் செய்கையும் மறந்துபோய், நெடு நிலம் சேர்ந்தான்.
 

அனுமன்,  வந்தவன் இந்திரன் ஈது என்கொல் அமைந்தான்?
(அது   கண்ட)   அனுமன்,   ‘வந்தவனோ   இந்திரன்,   (நம்மோடு
போர் செய்தலாகிய)  இதனை  எது  கருதி  மேற்கொண்டான்?  இனி
என்? எற்றுவன்   களிற்றினோடு  எடுத்து  என  எழுந்தான்
 -  
இவ்வாறு பகைவனாக வந்துள்ளமையால்) இப்பொழுது  செய்தற்குரியது
வேறு என்ன இருக்கிறது?  (இவனை)  யானையோடும்  எடுத்து  எற்றித்
தள்ளுவேன்’ எனக்கிளர்ந்து  எழுந்தவன்;  தனுவின்  ஆயிர  கோடி
வெங்கடுங்கணை தைக்க
- (தனது) உடம்பில் ஆயிரங்கோடி வெம்மை
மிக்க அம்புகள் தைக்க; நினைவும் செய்கையும் மறந்து போய் நெடு
நிலம்  சேர்ந்தான்  
 -   தன்நினைவும்   செயலும்  மறந்து  போக
நெடியதரையின் கண் வீழ்ந்தான்.
 
 

                                                (172)
 

8613.

அருக்கன் மா மகன், ஆடகக் குன்றின்மேல் அலர்ந்த
முருக்கின் கானகம் ஆம் என, குருதி நீர் முடுக
தருக்கி, வெஞ் சரம் தலைத்தலை மயங்கின தைக்க,
உருக்கு செம்பு என கண்ணினன், நெடு நிலம் உற்றான்.
 

அருக்கன் மாமகன் - பெருமை  வாய்ந்த  சூரியன்  புதல்வனான
சுக்ரீவன்;     ஆடகக்     குன்றின்    மேல்     அலர்ந்த  -