பக்கம் எண் :

58யுத்த காண்டம் 

கிடந்த     ஏக்கறவால் - ஒரு பெண்ணின் முலையிடத்துக் கொண்ட
ஆசையால்  தாழ்ந்தேன்;  வாழ்ந்தேன்  -  (மானம் இன்றி) இன்னும்
உயிருடன் இருக்கிறேன்;  உனை  இழந்தும்  இன்னம்  இரேனோ -
உன்னை இழந்தும் இன்னும் (உயிருடன்) இருக்க மாட்டேனோ?
 

ஓரு     பெண்ணின் மீது கொண்ட காமம் தன்னையும் தன்னைச்
சேர்ந்தவர்களையும்  படுத்தும் பாட்டை இப்பாடலில் இராவணன் கூறி
அரற்றுகிறான்.   எம்பியர்கள்   -   கரன்  தூடணன்  கும்பகருணன்
முதலியோர்.   மாதுலனார்   -   மாமனாகிய  மாரீசன்.  ஏக்கறவு  -
ஆசையால் தாழ்தல்.
 

                                                   (83)

7715.‘தன்னைத்தான், தம்பியைத்தான், தானைத் தலைவனைத்தான்,
மன்னைத்தான், மைந்தனைத்தான், மாருதத்தின் காதலைத்
                                             தான்,
பின்னைக் கரடிக்கு இறையைத்தான், பேர் மாய்த்தாய்
என்னத்தான் கேட்டிலேன்; என் ஆனவாறு இதுவே!
 

தன்னைத்தான்   - இராமன் தன்னைத்தான்; தம்பியைத் தான் -
தம்பியாகிய  இலக்குவனைத்தான்; தானைத்  தலைவனைத்  தான் -
வானர  சேனைத்  தலைவனாகிய நீலனைத்தான்; மன்னைத் தான் -
வானர அரசன் ஆகிய சுக்ரீவனைத்தான்; மைந்தனைத்தான் - (வாலி)
மகனாகிய  அங்கதனைத்  தான்;  மாருதத்தின் காதலைத்  தான்  -
காற்றின்  காதல்  மைந்தன்  ஆகிய  அனுமனைத்  தான்; பின்னைக்
கரடிக்கு  இறையைத்தான்
 - மற்றும் கரடிகளுக்குத் தலைவன் ஆகிய
சாம்பவானைத்தான்; பேர் மாய்த்தாய் என்னத் தான் கேட்டிலேன் -
பேரே  இல்லாமல்  செய்து  கொன்றாய் என்று கேட்டேனில்லை; என்
ஆனவாறு  இதுவே
 -  (உனக்கு  இச்சாவு)  எப்படி  ஆனது அதன்
தன்மை இதுவா.
 

                                                  (84)
 

கலி விருத்தம் (வேறு வகை)
 

7716.‘ஏழை மகளிர் அடி வருட, ஈர்ந் தென்றல்
வாழும் மணி அரங்கில், பூம் பள்ளி வைகுவாய்!
சூழும் அலகை துணங்கைப் பறை துவைப்ப,
பூமி அணைமேல் துயின்றனையோ, போர்க்களத்தே?