பக்கம் எண் :

580யுத்த காண்டம் 

பொன்மலையின்  மேல்பூத்துத் தோன்றும்; முருக்கின் கானகம் ஆம்
எனக்  குருதி  நீர்  முடுக
- செம்முருங்கக் காட்டினை யொத்து (தன்
உடம்பின்மேல்)  இரத்தம்  சுரந்து பெருகித் தோன்றுமாறு; வெஞ்சரம்
தலைத்  தலைமயங்கின  தைக்க
 - வெம்மையுடைய அம்புகள் (தன்
உடம்பின்)   இடந்தோறும்   விரவினவாய்த்  தைத்து   ஊன்றுதலால்;
உருக்கு   செம்பு  எனக்  கண்ணினன்  - ‘உருகிய  செம்பு’  எனக்
கூறத்தக்க  (சிவந்த)  கண்களை  உடையவனாகி;  தருக்கி, நெடுநிலம்
உற்றான்
- செருக்குற்று நீண்டதரையிடத்தே வீழ்ந்தான்.
 

                                                 (173)
 

8614.அங்கதன், பதினாயிரம் அயில் கணை அழுந்த;
சிங்கஏறு இடியுண்டென நெடு நிலம் சேர்ந்தான்;
சங்கம் ஏறிய பெரும் புகழ்ச் சாம்பனும் சாய்ந்தான்,
துங்க மார்பையும் தோளையும் வடிக் கணை துளைக்க.
 

அங்கதன் பதினாயிரம் அயில்கணை அழுந்த - அங்கதன் (தன்
உடல்  மீது)  பதினாயிரம் கூரிய அம்புகள் தைக்கப்பெற்று; சிங்க ஏறு
இடியுண்டென  நெடுநிலம்  சேர்ந்தான்
 - ஆண்சிங்கம்  இடியினால்
தாக்கப்   பட்டாற்போன்று   நெடிய   நிலத்தில்   வீழ்ந்தான்;  துங்க
மார்பையும்   தோளையும்   வடிக்கணை துளைக்க
  -   உயர்ந்த
மார்பையும்,  தோளையும்  கூரிய  அம்புகள்  துளைத்ததனால்; சங்கம்
ஏறிய பெரும் புகழ்ச் சாம்பனும் சாய்ந்தான்
-வீரர் குழுவில் உயர்ந்து
விளங்கிய பெரிய புகழினனான சாம்பவனும் (தரையில்) சாய்ந்தான்.
 

சங்கம்     - குழு, அவைக்களம். சிறந்த அனுபவமும் எடுத்ததை
முடிக்கும்  ஆற்றலும்  விடா  முயற்சியும் பின்னிடாவீரமும் அமையப்
பெற்றவன் சாம்பவான். எனவே, பெரும்புகழ்ச்சாம்பன் எனப்பட்டான்.
இன்றும்   “நீ   பெரிய   சாம்பவனோ?”  எனவும்,  “அதில்  அவர்
சாம்பவான்” எனவும் உலகியலில் பேசப்படுதலைக் காணலாம்.
 

                                                 (174)
 

8615.நீலன், ஆயிரம் வடிக் கணை நிறம் புக்கு நெருங்க,
காலனார் முகம் கண்டனன்; இடபன் விண் கலந்தான்;
ஆலமே அன்ன பகழியால், பனசனும் அயர்ந்தான்;
கோலின் மேவிய கூற்றினால், குமுதனும் குறைந்தான்.