நீலன் ஆயிரம் வடிக்கணை நிறம்புக்கு நெருங்க - (வானர வீரர்களில்) நீலன் என்பான் ஆயிரம் கூரிய அம்புகள் (தன்) மார்பில் புகுந்து செறிதலால்; காலனார் முகம் கண்டனன் - (உயிர் துறந்து) கூற்றுவனது முகத்தைக் காண்பானாயினான்; இடபன் விண் கலந்தான் - இடபன் வானுலகடைந்தான்; பனசனும் ஆலமே அன்ன பகழியால் அயர்ந்தான் - பனசன் ஆலகால நஞ்சினைப் போன்ற அம்பினால் அயர்வுற்றான்; குமுதனும் கோலின் மேவிய கூற்றினால் குறைந்தான் - குமுதன் அம்பின் வடிவத்தில் வந்த கூற்றுவனால் உயிர்குறைந்தான். |
(175) |
| 8616. | வேலை தட்டவன், ஆயிரம் பகழியால், வீழ்ந்தான்; வாலி நேர் வலி மயிந்தனும் துமிந்தனும் மடிந்தார்; கால வெந் தொழில் கவயனும் வானகம் கண்டான்; மாலை வாளியின் கேசரி மண்ணிடை மடிந்தான். |
வேலை தட்டவன், ஆயிரம் பகழியால், வீழ்ந்தான் - கடலை அணை கட்டித் தடுத்தவனாகிய நளன் ஆயிரம் அம்புகளால் வீழ்ந்து இறந்தான்; வாலி நேர் வலி மயிந்தனும் துமிந்தனும் மடிந்தார் - வாலியை ஒத்த வலிமை வாய்ந்தமயிந்தன் என்பானும் (அவன் தம்பி) துமிந்தனும் ஒருசேர மாண்டனர்; காலவெந்தொழில் கவயனும் வானகம் கண்டான் - காலனையொத்த கொடுந்தொழிலை உடைய கவயன் என்பவனும் (உயிர்துறந்து) வானகம் சேர்ந்தான்; மாலை வாளியின் கேசரி மண்ணிடை மடிந்தான் - மாலை போன்று (தொடர்ச்சியாக) வந்த அம்புகளால் கேசரி என்பான் நிலத்தில் வீழ்ந்து இறந்தான். |
தட்டவன் - (கடலை மலைகளைக் கொண்டு அணைகட்டித்) தடுத்தவனாகிய நளன். “தட்டோரம்ம விவண் தட்டோரே” எனவரும் புறப்பாடல் (18) காணத்தக்கது. வாலி நேர்வலி - வாலியை யொத்தவலிமை; காலவெந்தொழில் - காலனைப் போலக் கொன்று குவிக்கும் தொழில். மாலைவாளி - மாலைபோன்று தொடர்ச்சியாக வந்த அம்புகள். |
(176) |
8617. | கனகன் ஆயிரம் கணை பட, விண்ணிடைக் கலந்தான்; அனகன் ஆயின சங்கனும் அக் கணத்து அயர்ந்தான்; |