| முனையின் வாளியின் சதவலி என்பவன் முடிந்தான்; புனையும் அம்பினில் தம்பனும் பொருப்பு எனப் புரண்டான்.* | கனகன் ஆயிரம் கணைபட விண்ணிடைக் கலந்தான் - கனகன் என்பவன் ஆயிரம் அம்புகள் பாய்ந்தமையால் (உயிர் நீத்து) விண்ணில் கலந்தான்; அனகனாயின சங்கனும் அக்கணத்து அயர்ந்தான் - (மாயையால்) அரூபியான சங்கன் என்பவனும் (அம்புகள்பட்ட) அந்தக் கணத்திலேயே அயர்ந்தான்; முனையின் வாளியின் சதவலி என்பவன் முடிந்தான் - முனைதீட்டப் பெற்ற அம்பினால் சதவலி என்பவன் இறந்தான்; புனையும் அம்பினில் தம்பனும் பொருப்பு எனப் புரண்டான் - புனைந்து ஏவப் பெற்ற அம்பினால் தம்பன் என்பவனும் மலைபோல மண்ணில் புரண்டான். | (177) | 8618. | விந்தம் அன்ன தோள் சதவலி, சுசேடணன், வினதன், கெந்தமாதனன், இடும்பன், வன் ததிமுகன், கிளர, உந்து வார் கணை கோடி தம் உடலம் உற்று ஒளிப்ப, தம்தம் நல் உணர்வு ஒடுங்கினர், மண் உறச் சாய்ந்தார்.* | விந்தம் அன்ன தோள் சதவலி சுசேடணன், வினதன் - விந்த மலையினை ஒத்து உயர்ந்த தோளையுடைய சதவலி, சுசேடணன் வினதன்; கெந்தமாதனன், இடும்பன்வன் ததிமுகன்கிளர - கந்தமாதனன், இடும்பன், வன்மையுடைய ததிமுகன் ஆகிய வானர வீரர்கள், கிளர்ந்துமேலெழ; உந்துவார்கணை கோடி தம் உடலம் உற்று ஒளிப்ப - (இந்திரசித்தனாற்) செலுத்தப்பட்ட நீண்ட அம்புகள் கோடிக்கணக்கின வாகத்தம் உடலில் அழுந்தத் தைத்து மறைந்தலால்; தம்தம் நல் உணர்வு ஒடுங்கினர் மண் உறச் சாய்ந்தார் - தங்கள் தங்களது நல்லுணர்வு ஒடுங்கியவர்களாய் மண்ணிற் பொருந்த வீழ்ந்தார்கள். | (178) | | 8619. | மற்றை வீரர்கள் யாவரும் வடிக் கணை மழையால் முற்றம் வீந்தனர்; முழங்கு பேர் உதிரத்தின் முந்நீர் |
|
|
|