| எற்று வான் திரைக் கடலொடும் பொருது சென்று ஏற, ஒற்றை வான் கணை ஆயிரம் குரங்கினை உருட்ட. |
முழங்கு பேர் உதிரத்தின் முந்நீர் - ஒலிக்கின்ற பெரிய குருதி நீராகிய (செங்)கடல்;எற்று வான் திரைக் கடலொடும் - மோதுகின்ற பெரிய அலைகளை உடைய கருங்கடலோடு; பொருது சென்று ஏற - எதிர்த்து மோதி மேற் செல்லும்படி; ஒற்றை வான் கணை ஆயிரம் குரங்கினை உருட்ட - (ஆயிரம் ஆயிரமாகப் பெருகிய பிரமாத்திரத்தின்) ஒரு தெய்வக்கணை ஆயிரம் வானரங்கள் வீதம் ஒரு சேர உருட்டித்தள்ள; மற்றைவீரர்கள் யாவரும் வடிக்கணை மழையால் - (மேலேகுறிக்கப்பட்டவர்களை யொத்த) ஏனைய வானரவீரர்கள் அனைவரும் கூரிய அம்பு மழையால்; முற்றும் வீந்தனர் - (தாக்கப்பட்டு) முழுமையாக அழிந்து போயினார். |
(179) |
| 8620. | தளைத்து வைத்தது, சதுமுகன் பெரும் படை தள்ளி; ஒளிக்க, மற்றொரு புகலிடம் உணர்கிலர்; உருமின் வளைத்து வித்திய வாளியால், மண்ணொடும் திண்ணம் முளைப் புடைத்தன ஒத்தன; வானரம் முடிந்த. |
சதுமுகன் பெரும்படை தள்ளித் தளைத்து வைத்தது - நான் முகனது பெருமை வாய்ந்த படைக்கலமானது (வானரங்களைக் கீழே) தள்ளிப் பிணித்துவிட்டது;ஒளிக்க, மற்றொரு புகலிடம் உணர்கிலர் - (அவ்விடத்தை விட்டுத் தப்பியோடி) மறைதற்கு அன்னோர் வேறொரு பாதுகாப்பான இடத்தை உணர்தற்கு இயலாதவராயினர்; உருமின் வளைத்து வித்திய வாளியால் மண்ணொடும் திண்ணம் - இடியினைப் போன்று சுற்றிலும் எய்யப்பெற்ற அம்புகளால் பூமியுடன் சேர்த்து உறுதியாக; முளைப்புடைத்தான் ஒத்தன வானரம் முடிந்த - முளையடிக்கப் பட்டவற்றை ஒத்தனவாய் அங்குள்ள வானரங்கள் யாவும் இறந்தன. |
(180) |
| 8621. | குவளைக் கண்ணினை வான் அர மடந்தையர் கோட்டித் துவள, பாரிடைக் கிடந்தனர்; குருதி நீர் சுற்றித் |