| திவள, கீழொடு மேல் புடை பரந்து இடை செறிய, பவளக் காடுடைப் பாற்கடல் ஒத்தது, அப் பரவை. | குவளைக் கண்ணினைக்கோட்டி - நீலமலர்போன்ற கண்களைச் சாய்த்து நோக்கி; வான் அரமடந்தையர் துவள - வானுலகிலுள்ள தேவமகளிர் வாட்டமுற்று வருந்த; பாரிடைக் கிடந்தனர் - (வானரவீரர்கள்) பூமியிற் (பிணமாகக்) கிடந்தார்கள்; குருதி நீர் சுற்றிக் கீழொடு மேல் புடை பரந்து - (அவர்தம் வெண்ணிற உடம்பினின்றும் வெளிப்பட்ட) இரத்த நீர் கீழும் மேலும் பக்கங்களிலும் பரவி; இடை திவள செறிய - இடையிடையே நெருங்கி விளங்குதலால்; அப்பரவை, பவளக் காடுடைப் பாற்கடல் ஒத்தது - அந்த (வானரப்படையாகிய) கடற்பரப்பானது பவளக்கொடிகளாகிய காடுகளையுடைய பாற்கடலை ஒத்துத் தோன்றியது. | (181) | | 8622. | விண்ணில் சென்றது, கவிக் குலப் பெரும் படை வெள்ளம்; கண்ணில் கண்டனர் வானவர், விருந்து எனக் கலந்தார், உள் நிற்கும் பெருங் களிப்பினர், அளவளாய் உவந்தார்; ‘மண்ணில் செல்லுதிர், இக் கணத்தே’ எனும் மனத்தார். | கவிக்குலப் பெரும்படை வெள்ளம் விண்ணில் சென்றது - வானரகுலப்பெரும் படையாகிய வெள்ளம் (மண்ணில் உயிர்துறந்து தேவர்களாகி) விண்ணுலகிற் சென்றது; வானவர் கண்ணில் கண்டனர் விருந்து எனக் கலந்தார் - (அதனைத்) தேவர்கள் தம் கண்களாற் கண்டவர்களாய் விருந்தினர்என (அன்பினாற்) கலந்தவர்களாய்; உள்நிற்கும் பெருங்களிப்பினர் - உள்ளத்தில் நிலைபெற்ற பெருங்களிப்பினை உடையவர்களாய்; அளவளாய் உவந்தார் - (அவர்களோடு) அளவளாவி மகிழ்ந்தார்கள்; இக்கணத்தே மண்ணில் செல்லுதிர் - ‘(நீங்கள், எம்பொருட்டு) இப்பொழுதே’ மண்ணுலகத்திற்கு (மீண்டு) செல்வீராக; என வலித்தார் - எனவற்புறுத்தி வேண்டினார்கள். | (182) |
|
|
|