பக்கம் எண் :

586யுத்த காண்டம் 

      இந்திரசித்தன் தந்தையின் இருப்பிடம் சென்று செய்தி சொல்லுதல்
 

8625.‘வெங் கண் வானரக் குழுவொடும், இளையவன் விளிந்தான்;
இங்கு வந்திலன், இராமன் இப்போது’ என இகழ்ந்தான்;
சங்கம் ஊதினன்; தாதையை வல்லையில் சார்ந்தான்;
பொங்கு போரிடைப் புகுந்துள பொருள் எலாம் புகன்றான்.
 

‘வெங்கண்    வானரக் குழுவொடும் - ‘வெகுளி மிக்க கண்களை
உடைய   வானரக்  கூட்டத்துடன்;   இளையவன்   விளிந்தான்   -
இலக்குவன்    இறந்து   பட்டான்;   இராமன்   இப்போது   இங்கு
வந்திலன்’ 
-    (அவன்     தமையனாகிய)    இராமனோ    (யான்
பிரமாத்திரம்   விடுத்த  இப்பொழுது)   இப்போர்க்களத்திடத்து   வந்து
சேர்ந்திலன்’;   என  இகழ்ந்தான்   -    என்று    இகழ்ந்தவனாகிய
இந்திரசித்து;  சங்கம்  ஊதினான்  - (வெற்றிச்)  சங்கினை ஊதினான்;
தாதையை  வல்லையில்  சார்ந்தான்   -   (பிறகு)  தன்தந்தையாகிய
இராவணனை   விரைவிற்   சென்றடைந்து;   பொங்கு  போரிடை  -
எழுச்சி  மிக்க போரின்கண்; புகுந்துள  பொருள் எலாம் புகன்றான் -
விளைந்துள்ள நிகழ்ச்சிகளை எல்லாம் எடுத்துரைத்தான்.
 

                                                 (185)
 

              ‘இராமன் இறந்திலனோ?’ என்ற இராவணன் வினாவும்
                                      இந்திரசித்தன் விடையும்
 

8626.‘இறந்திலன்கொலாம்   இராமன்?’   என்று    இராவணன்
                                     இசைத்தான்;
‘துறந்து நீங்கினன்; அல்லனேல், தம்பியைத் தொலைத்து,
சிறந்த நண்பரைக் கொன்று, தன் சேனையைச் சிதைக்க,
மறந்து நிற்குமோ, மற்று அவன் திறன்?’ என்றான், மதலை.
   

“இறந்திலன் கொலாம் இராமன்?” - (இந்திரசித்தன் கூறியவற்றைக்
கேட்டபின்பு)   ‘இராமன்   இறக்கவில்லையோ?’  என்று  இராவணன்
இசைத்தான்
 -  என்று  (மகனைப்பார்த்து)   இராவணன்  கேட்டான்;
(அதற்கு); ‘துறந்து நீங்கினான்’ -