‘அவ்விராமன் போர்க்களத்தை விட்டு எங்கேயோ சென்று விட்டான்; அல்லனேல் - அங்ஙனம் செல்லாதிருந்திருப்பானாயின்; தம்பியைத் தொலைத்து - அவனுடைய தம்பியாகிய இலக்குவனை உயிர் நீங்கச் செய்து; சிறந்த நண்பரைக் கொன்று - அவனுக்குச் சிறந்த நண்பர்களாயிருந்தோரை எல்லாம் கொன்று; தன்சேனையைச் சிதைக்க - அவன்றன்னுடைய சேனையையும் சிதைத்த (பிரம்மாத்திரம்); மற்று அவன் திறம் - மற்று அவ்விராமன் பக்கத்தும்; மறந்து நிற்குமோ - (கொல்லாமல்) மறந்து நிற்பதுண்டோ? என்றான் மதலை - என்று மறுமொழி கூறினான்; மைந்தனாகிய இந்திரசித்து. |
(186) |
| 8627. | ‘அன்னதே’ என, அரக்கனும் ஆதரித்து அமைந்தான்; சொன்ன மைந்தனும், தன் பெருங் கோயிலைத் தொடர்ந்தான்; மன்னர் ஏவலின் போயினன், மகோதரன் வந்தான்; எனனை ஆளுடைய நாயகன் வேறு இடத்து இருந்தான். |
அன்னதே என - (நீ கூறிய) அதுவே நிகழ்ந்திருத்தல் வேண்டும் என்று கூறி; அரக்கனும் ஆதரித்து அமைந்தான் - இராவணன் (தன்மகன் கூறியதை) உடன்பட்டு ஏற்றுக்கொண்டான்; சொன்ன மைந்தனும் - (நிகழ்ந்தவற்றைச்) சொன்ன இந்திர சித்தும்; தன் பெருங் கோயிலைத் தொடர்ந்தான் - தனது பெரிய மாளிகையினை அடைந்தான்; மன்னன் ஏவலின் போயினன் - இராவணன் ஏவலால் முன்பு போருக்குச் சென்றவனாகிய;மகோதரன் வந்தான் - மகோதரனும் (மீண்டு தன் இருப்பிடத்திற்கு) வந்து சேர்ந்தான்; என்னை ஆளுடை நாயகன் - என்னை அடிமையாக உடைய இறைவனான இராமன்; வேறு இடத்து இருந்தான் - (தெய்வப்படைக்கலங்களுக்கு வழிபாடு செய்து கொண்டு) வேறோர் இடத்தில் தங்கி இருந்தான். |
‘என்னை ஆளுடை நாயகன்’ என்றவிடத்துக் கவிக்கூற்றாயிற்று. இதனால் கம்பர் இராமபிரானையே வழிபடு தெய்வமாகக் கொண்டிருக்கக்கூடுமெனச் கூற இடனாயிற்று. ‘என்னை ஆளுடையவன்’ (கம்ப. 194) என் முன்னும் கவிக் கூற்றாக வந்துள்ளது. |
(187) |