பக்கம் எண் :

588யுத்த காண்டம் 

                 இராமன் தெய்வப்படைகளுக்கு வழிபாடு இயற்றிப்
                                         போர்க்களம் புகுதல்

 

8628.செய்ய தாமரை நாள்மலர்க் கைத் தலம் சேப்ப,
துய்ய தெய்வ வான் படைக்கு எலாம் வரன்முறை துரக்கும்
மெய்கொள் பூசனை விதிமுறை இயற்றி, மேல், வீரன்,
‘மொய்கொள் போர்க் களத்து எய்துவாம் இனி’ என
                                      முயன்றான்.
 

வீரன்     - (வீரருள்)  வீரனாகிய  இராமபிரான்; செய்ய தாமரை
நாள்மலர்
 -  அன்றலர்ந்த  செந்தாமரை  மலர் போன்ற; கைத்தலம்
சேப்ப
 -  (தனது) கைத்தலங்கள் மேலும் சிவக்கும்படி; துய்ய தெய்வ
வான்  படைக்கு  எலாம்
 - தூய்மையும் தெய்வத்தன்மையும் உடைய
உயர்ந்த    (தனது)   படைகளுக்கெல்லாம்;   வரன்முறை   துரக்கும்
மெய்கொள்    பூசனை
   -    வரன்முறையாகச்   செலுத்துதற்குரிய
மெய்மையான   வழி  பாட்டினை;  விதி  முறை  இயற்றி  -  செய்ய
வேண்டிய முறைப்படி செய்து; மேல் - பிறகு,  இனிமேல்; மொய்கொள்
போர்க்களத்து
   -   (வீரர்தம்)   வலிமை   விளங்கித்   தோன்றும்
போர்க்களத்திடத்து; எய்துவாம் என முயன்றான் - செல்வோம் என்று
(புறப்படுதலாகிய) முயற்சியை மேற்கொண்டான்.
 

                                                 (188)
 

8629.கொள்ளியின் சுடர் அனலிதன் பகழி கைக்கொண்டான்;
அள்ளி நுங்கலாம் ஆர் இருட் பிழம்பினை அழித்தான்;
வெள்ள வெங் களப் பரப்பினைப் பொருக்கென விழித்தான்;
தள்ளி, தாமரைச் சேவடி நுடங்குறச் சார்ந்தான்.
 

கொள்ளியின்   சுடர் அனலிதன் - தீக்கொள்ளியினை யொத்துச்
சுடர் விட்டொளிர்கின்ற அக்கினி தேவனது; பகழிகைக் கொண்டான் -
அம்பினைத்  தன்  கையிற்  கொண்டவனாகி;   அள்ளி  நுங்கலாம் -
(கையினால்)  அள்ளியெடுத்து  விழுங்குதற்குத்  தக்கவாறு; ஆர் இருட்
பிழம்பினை அழித்தான்
- திரண்டுள்ள அரிய  இருளின் பிழம்பினைச்
சிதைத்து   அழித்தான்;   தள்ளில்   தாமரைச்  சேவடி  -  தள்ளப்
படுதற்கியலாத  (சிறந்த) தாமரை  போன்ற  சிவந்த திருவடி; நுடங்குறச்
சார்ந்தான்
- அசைவுற்றுத் தளர நடந்து