சென்று; வெள்ள வெங்களப் பரப்பினை - (குருதி) வெள்ளம் நிரம்பிய கொடுமை மிக்க போர்க்களமாகிய பரந்த இடத்தினைப்; பொருக்கென விழித்தான் - திடுக்கிட்டு விழித்துப் பார்த்தான். |
தனக்கென ஒருவடிவில்லாத இருள் செறிவு மிகுதியால் கையினால் அள்ளி எடுத்து உட் கொள்ளத்தக்கவாறு தோன்றியதால், ‘அள்ளி நுங்கலாம் ஆரிருட் பிழம்பு’ என்றார். தள்ளில் தாமரை - எவ்விதித்தும் குறை கூறித்தள்ளவியலாத தாமரை என்றவாறு, தான் விட்டுச்சென்ற பொழுது இருந்ததைப் போலல்லாமல் குருதி வெள்ளம் நிறைந்து கொடுமையாகக் காட்சியளித்ததால் திடுக்கிட்டு விழித்துப் பார்த்தான் என்பதாம். |
(189) |
வீழ்ந்து கிடக்கும் சுக்ரீவன் முதலானோரைத் தனித்தனி கண்டு இராமன் வருந்துதல் |
| 8630. | நோக்கினான் பெருந் திசைதொறும்; முறை முறை நோக்கி, ஊக்கினான்; தடந் தாமரைத் திரு முகத்து உதிரம் போக்கினான்; நிணப் பறந்தலை அழுவத்துள் புக்கான்; காக்கும் வன் துணைத் தலைவரைத் தனித் தனி கண்டான். |
நோக்கினான் - (அங்ஙனம் போர்க்களத்தை) விழித்துப் பார்த்தவனாகிய இராமபிரான்; பெருந்திசை தொறும் முறை முறை நோக்கி - திசையிடங்கள் தோறும் அடுத்தடுத்து உற்றுப்பார்த்து; ஊக்கினான் - (அங்குள்ள அவலக் காட்சிகளைக் கண்டு) முயன்று மேற்சென்றவனாய்; தடந்தாமரைத் திரு முகத்து - விரிந்த பெரிய செந்தாமரை மலர் போலும் (தன்) அழகிய முகத்தின் கண்ணே; உதிரம் போக்கினான் - உதிரத்தை வெளிப்படுத்தினான்; நிணப்பறந்தலை அழுவத்துள் புக்கான் - நிணம் நிறைந்த போர்க்களப் பரப்பினிடத்தே புகுந்தான்; காக்கும் வன் துணைத் தலைவரை - (தன் சேனையைக்) காத்தற்றொழிலை மேற்கொண்டிருந்த வலிமை வாய்ந்த துணையாயமைந்த (வானரத்) தலைவைர்களை; தனித்தனி கண்டான் - (ஒவ்வொருவராகத்) தனித்தனியே சென்று பார்த்தான். |
ஊக்குதல் - முயலுதல், முயன்று மேற் செல்லுதல். இராமபிரான் போர்க்களமெங்கும் தன் வீரர்கள் மாண்டு கிடத்தலைக் கண்டு முகம் |