பக்கம் எண் :

590யுத்த காண்டம் 

வெளுத்துக்       கண்களில்     உதிரம்     ஒழுக     அவலமும்
வெகுளியுமுடையனாய்     வானர    வீரர்கள்   ஒவ்வொருவரையும்
தனித்தனியே    சென்று    கண்டு    வருந்தியதுன்ப   நிலையினை
இச்செய்யுளும்     அடுத்து     வருவனவும்    விரித்துரைக்கின்றன.
எந்நிலையிலும்   விருப்பு   வெறுப்புக்களைக்  கடந்து  சித்திரத்தின்
செந்தாமரை   ஒத்திருக்கும்  உள்ளத்தவனாகிய  இராமபிரான்  உற்ற
அவலம் அருமையாய் சித்தரிக்கப்பட்டுள்ளது.
 

                                                 (190)
 

8631.சுக்ரீவனை நோக்கி, தன் தாமரைத் துணைக் கண்
உக்க நீர்த்திரள் ஒழுகிட, நெடிது நின்று உயிர்த்தான்;
‘தக்கதோ, இது நினக்கு!’ என்று, தனி மனம் தளர்ந்தான்;
பக்கம் நோக்கினன்; மாருதி தன்மையைப் பார்த்தான்.
 

சுக்ரீவனை நோக்கி - (மடிந்துகிடக்கும்) சுக்ரீவனைப் பார்த்து; தன்
தாமரைத்   துணைக்கண்
  -   தனது   தாமரை   மலர்   போன்ற
இருகண்களினின்றும்;   உக்க   நீர்த்திரள்   ஒழுகிட  -   சிந்திய
கண்ணீர்த்திரள்  வழிந்த படி  இருக்க; நின்று நெடிது உயிர்த்தான் -
(செயலற்று)  நின்று  பெருமூச்செறிந்தான்;  ‘இது  நினக்குத் தக்கதோ
என்று
 - (என்னைத்  தனியே புலம்புமாறு விட்டுப் பிரிந்து) இங்ஙனம்
கிடப்பது  உனக்குப்  பொருந்துவதோ என்று; தனிமனந்தளர்ந்தான் -
மனந்தளர்ந்து  வருந்தினான்; பக்கம் நோக்கினன்  - (அச்சுக்ரீவனது)
பக்கத்தில் பார்த்தான்; மாருதிதன்மையைப் பார்த்தான் - அனுமானின்
நிலைமையைக் கண்ணுற்றான்.
 

                                                 (191)
 

8632.‘கடல் கடந்து புக்கு, அரக்கரைக் கருவொடும் கலக்கி,
இடர் கடந்து நான் இருக்க, நீ நல்கியது இதற்கோ?
உடல் கடந்தனவோ, உனை அரக்கன் வில் உதைத்த
அடல் கடந்த போர்வாளி?’ என்று, ஆகுலித்து அழுதான்.
 

கடல்   கடந்து புக்கு - கடலைக் கடந்து (இலங்கையினுள்) புகுந்து;
அரக்கரைக் கருவொடும்  கலக்கி  -  (எதிர்ப்பட்ட)  அரக்கர்களைக்
கருவுடனே   கலங்கச்செய்து;  இடர்   கடந்து   நான்   இருக்க  -
(அரக்கர்செய்த)   துன்பத்தைக்    கடந்து    நான்   (உயிர்   தாங்கி)
இருக்கும்படி; நீநல்கியது இதற்கோ - நீ (எனக்கு) உதவியது (இங்ஙனம்
உன்னை இழந்து, பார்த்துப் பரிதவிப்பதற்குத்