பக்கம் எண் :

 பிரம்மாத்திரப் படலம் 591

தானோ?’     அரக்கன்   வில்   உதைத்த  -    அரக்கனுடைய
(இந்திரசித்தினுடைய)  வில்லினின்று  செலுத்திய; அடல் கடந்த போர்
வாளி
 -  வலிமை  வாய்ந்த  போர்த்தொழிற்குரிய அம்புகள்; உனை,
உடல்   கடந்தனவோ?
 - உனது  உடம்பினை  ஊடுருவி  அப்பாற்
சென்றனவோ?”   என்று  ஆகுலித்து  அழுதான்  -  என்று  கூறி
(வாய்விட்டு அரற்றி) இரைந்து அழுதான் (இராமன்).
 

                                                 (192)
 

8633.‘முன்னைத் தேவர்தம் வரங்களும், முனிவர்தம் மொழியும்,
பின்னைச் சானகி உதவியும், பிழைத்தன; பிறந்த
புன்மைச் செய் தொழில் என் வினைக் கொடுமையால்
                                        புகழோய்
என்னைப் போல்பவர் ஆர் உளர், ஒருவர்?’ என்று
                                      இசைத்தான்.

 

புகழோய்   - புகழத்தக்க  பெருமையுடையோனே! பிறந்த புன்மை
செய்  தொழில்
- (என்னுடன்)  தோன்றிய இழிந்த செய் தொழிலுக்குக்
காரணமாகிய;   என்வினைக்கொடுமையால்   -  எனது  தீவினையின்
கொடுமையால்; முன்னைத் தேவர்தம் வரங்களும் - முன்பு (உனக்குத்)
தேவர்கள்   கொடுத்த   வரங்களும்;    முனிவர்தம்  மொழியும்  -
முனிவர்கள்  அளித்த வாழ்த்துரையும்; பின்னைச் சானகி உதவியும் -
பின்பு  (சனகன் மகளாகிய) சானகி (நீ இலங்கையில்  அவளைக்  கண்ட
காலத்துச்)  செய்த  உதவியும்;  பிழைத்தன - ஆகிய  இவையெல்லாம்
(இன்னு உன்னைக் காத்தற்கு முடியாதனவாய்)  பயனற்றவாய்  ஒழிந்தன;
என்னைப்  போல்பவர்  ஒருவர் ஆர் உளர் - (இதற்குக்காரணமாய்)
என்னைப்    போன்று    (உயிர்     தாங்கி)    உள்ளவர்   ஒருவர்
(என்னையன்றிப்   பிறர்  யாருளர்?  என்று  இசைத்தான்  -  என்று
(தன்னை வெறுத்துக்) கூறினான் (இராமன்).
 

தேவர்தம்     வரங்களாவன; “உலகமுள்ளளவும் பெறுதி பெயராப்
புகழ்”  (உத்தர.  அனுமப்  -  34)  என  இந்திரனும்.” ‘என்வில்லார்
கரத்திற்  சத கூற்றில் ஒரு கூறுனக்கு மேவிடுக, எல்லா விஞ்சைகளும்
தரிக்க  இசைந்த  சக்தியுண்டாக,  நல்லாய்  கொள்  நீ’ தருகின்றேன்,
(உத்தர - அனுமப். 34) எனச் சூரியனும், ‘இரணபூமியிடை  நேர்ந்தால்
என்   பாசத்தால்  மரணமில்லை  உனக்கு’  என  வருணனும்,  ‘என்
தண்டத்தால்  முரணின்  மிகு மாருதி ஆவி முடியா தொழிக’ (உத்தர.
அனும - 36) என