இயமனும், ‘என்கதையால் நீ கூற்றின் சூழல் உறாய்’ எனக்குபேரனும், ‘என்கர மூவிலையினாலும் என்னாலும் மாருதி ஆவியகாலாதொழிக’ (உத்தர - அனுமப் - 37) என ஈசனும், ‘என் பிரம தண்டால் தானும் சாவின்றி மேதாவியுமாய், ஒரு நாளும் விளியா நாளும் உறுக’ எனப் பிரமதேவனும், ‘தேவர்படையாற் செருக்களத்தில் வாதாமகன் சாவொழிக’ (உத்தர - அனுமப் - 38) எனவானோர் தச்சனும் கொடுத்த வரங்கள், ‘வந்து நின்ற மறையோர் முனிவரருளாளர் ஆனோரெல்லாமனுமனுக்கழிவிலாத வரமளிப்ப (உத்தர - அனுமப் - 39) என முனிவர் ஆசி நல்கியமை ஆகியவற்றைக் காணலாகும். சீதையை அசோகவனத்தில்கண்டு இராமனது மணியாழியைப் பெற்றுத் துயர் தவிர்ந்த சீதை அனுமனை நோக்கி, மனமகிழ்ந்து அளித்துதவிய (கம்ப. 5299) இறவாமையாகிய பெருவரம். |
‘புன்தொழிலால் புலைத்தன்மையை உடைய அரசு’ எனக் கூட்டிப் பொருள் கொண்டால், ஆளுவோன் தன்னால் ஆளப் பெறுகின்ற உயிர் வர்க்கங்களின் வினைப்பந்தங்களில் தானும் தொடர்புடையவனாகி நிற்றலால் புன் தொழிலாகவும், அரச செல்வம் பொறிபுலன்களுக்கேற்ற போக நுகர்ச்சிகளை வேண்டிய வண்ணம் கொடுக்கும் தன்மையதாகலின் புலைத் தன்மையதாகவும் கொண்டு |