பொருள்கொள்ளலாம். அங்ஙனமின்றி, ‘புலை அரசினை வெஃகுதலாகிய புன் தொழில்’ எனக் கூட்டியும் பொருள்கொள்ளலாம். தான் அரசினை ஏற்க ஒப்பியதை இங்ஙனம் பல்வேறு இடங்களிலும் இராமன் கடிந்து கூறிக் கொள்வதை நூலின் பிற பகுதிகளிலும் காணலாம். | (194) | | 8635. | ‘தமையனைக் கொன்று, தம்பிக்கு வானரத் தலைமை அமைய நல்கினென், அடங்கலும் அவிப்பதற்கு அமைந்தேன்; கமை பிடித்து நின்று, உங்களை இத்துணைக் கண்டேன்; சுமை உடல் பொறை சுமக்க வந்தேன்’ எனச் சொன்னான். | தமையனைக் கொன்று - அண்ணனைக் கொன்று; தம்பிக்கு வானரத்தலைமை - தம்பிக்கு (சுக்கிரீவனுக்கு) வானரகுல அரசனாம் தன்மையை; அமைய நல்கினென், - பொருந்தும்படி தந்து; அடங்கலும் அவிப்பதற்கு அமைந்தேன் -(நன்மை செய்வது போன்று அவ்வானவர்குலம்) முழுமையும் அழிப்பவனாகி அமைந்தேன்; கமைபிடித்து நின்று, - பொறுமையைக் கடைபிடித்து நின்று; உங்களை இத்துணை கண்டேன் - உங்களை இவ்வளவு துன்பத்திற்குள்ளாக்கினேன்; சுமை உடல் பொறை - பூமிக்குப் பாரமாகவுள்ள எனது உடம்பின் சுமையினை; சுமக்க வந்தேன்’ எனச் சொன்னான் - சுமத்தற்கென்றே (இவ்வுலகிற்) பிறந்தேன்’ என்று கூறி (இராமன்) வருந்தினான். | (195) | | 8636. | விடைக் குலங்களின் நடுவண் ஓர் விடை கிடந்தென்ன, கடைக்கண் தீ உக, அங்கதக் களிற்றினைக் கண்டான்; ‘படைக்கலங்களைச் சுமக்கின்ற பதகனேன், பழி பார்த்து, அடைக்கலப் பொருள் காத்தவாறு அழகிது’ என்று அழுதான். | விடைக்குலங்களின் நடுவண் - ‘எருதுக் கூட்டங்களின் நடுவே; ஓர் விடை கிடந்தென்ன - ஒப்பற்ற தோர் இடபம் |
|
|
|