பக்கம் எண் :

594யுத்த காண்டம் 

கிடந்தாற்போல     (ப்பெருவீரர்களின் நடுவிலே கிடக்கும்); அங்கதக்
களிற்றினை
  -  அங்கதனாகிய   யானையை;கண்டகடைதீ  உகக்
கண்டான்
 -  (இராமன்  தன்) கண்களின் கடையினின்றும் தீப்பொறி
பறக்குமாறு பார்த்தான்;படைக்கலங்களைச் சுமக்கின்ற பதகனேன் -
(பகைவரால்  துன்புறாது   அடைந்தாரைப்  பாதுகாக்கும்  நோக்குடன்)
ஆயுதங்களைச்  சுமந்து கொண்டுள்ள தீவினையாளனாகிய யான்; பழி
பார்த்து
-பழி (நேராமல்) நோக்கி; அடைக்கலப் பொருள் காத்தவாறு
-      (என்னிடத்தில்     ஒப்புவித்த)      அடைக்கலப்பொருளைப்
பாதுகாத்ததிறம்; அழகிது’ என்று அழுதான் - மிகவும் அழகாயுள்ளது’
என்று கூறி அழுதான்.
 

அடைக்கலப்பொருள்     அங்கதன். அவனை, இறக்கும் நிலையில்
வாலி,   “பொய்யுடை   உள்ளத்தார்க்குப்  புலப்படாப்  புலவ...  உன்
கையடையாகும்”  எனக்  கூறி அடைக்கலமாகத் தந்தமை  (கம்ப.4092)
முன்பு காண்க.
 

                                                (196)
 

                 இலக்குவனைக் கண்டு இராமன் அடைந்த துயரம்
 

8637.உடரிடைத் தொடர் பகழியின் ஒளிர் கதிர்க் கற்றைச்
சுடருடைப் பெருங் குருதியில், பாம்பு எனச் சுமந்த
மிடருடைப் பண மீமிசை, தான் பண்டை வெள்ளக்
கடரிடைத் துயில்வான் அன்ன தம்பியைக் கண்டான்.
 

உடரிடைத்   தொடர் பகழியின் - உடம்பின் இடையே துளைத்து
ஊடுருவிய  அம்புகளின்;  ஒளிர்கதிர்க் கற்றை - ஒளிவிட்டு விளங்கும்
ஒளித் தொகுதியான; சுடருடைப் பெருங் குருதியில் - சுடரினையுடைய
பெரிய   குருதியினிடத்தே;   பாம்பு  எனச்  சுமந்த  -  பாம்பெனப்
பகருமாறு  சுமந்து அக்காட்சி; மிடருடைப் பணமீமிசை -  வலிமையை
உடைய  ஆதிசேடன்  என்னும்)  பாம்பின் மேல்; பண்டை  வெள்ளக்
கடரிடை
 -  பழமையான  பாற்கடலின்  கண்ணே;  துயில்வான் தான்
அன்ன
 -  துயில்பவனாகிய   தன்னை   நிகர்த்திருக்க  (க்கிடைக்கும்);
தம்பியைக்   கண்டான்  -  இளவலான  இலக்குவனை  இராமபிரான்
பார்த்தான்.
 

பணம் என்பது படத்தினை உடைய பாம்பினைக் குறித்தது.
 

                                               (197)