பக்கம் எண் :

 பிரம்மாத்திரப் படலம் 595

8638.பொருமினான்,   அகம்;   பொங்கினான்;  உயிர்  முற்றும்
                                      புகைந்தான்;
குரு மணித் திரு மேனியும், மனம் எனக் குலைந்தான்;
தருமம் நின்று தன் கண் புடைத்து அலமர, சாய்ந்தான்;
உருமினால் இடியுண்டது ஓர் மராமரம் ஒத்தான்.
 

அகம்   பொருமினான் - (இரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடக்கும்
தம்பியைக்   கண்ட  இராமன்)  மனம்  வெதும்பினான்; பொங்கினான்;
உயிர் முற்றும்  புகைந்தான்  -  வெகுளி  மிகுந்தவனாகி  உயிர்ப்பு
முழுமையும்    புகையுடன்    தோன்றப்    பெற்றான்;   குருமணித்
திருமேனியும்
 -  நிறந்தாங்கிய  நீலமணி  போலும்  (தனது) அழகிய
உடம்பும்;  மனம் எனக் குலைந்தான் - உள்ளம்போல நடுக்கமுற்றான்;
தருமம் நின்று - அறக்கடவுள் (இத்துன்பநிலை கண்டு இரங்கி) நின்று;
தன்கண்புடைத்து  அலமரச் சாய்ந்தான் - தன் கண்களில் அடித்துக்
கொண்டு வருந்துமாறு (நிலத்தில்) சாய்ந்தான்; உருமினால் இடியுண்டது
ஓர்
 -  இடியினால்   தாக்கப்பட்டதொரு;   மராமரம்  ஒத்தான்  -
மராமரத்தை ஒத்து (த்தரையில்) வீழ்ந்தான்.
 

                                                (198)
 

8639.உயிர்த்திலன் ஒரு நாழிகை; உணர்ந்திலன் ஒன்றும்;
வியர்த்திலன், உடல்; விழித்திலன், கண் இணை;
                                விண்ணோர்,
‘அயிர்த்து இலன் கொல்?’ என்று அஞ்சினர்;
                           அங்கையும் தாளும்
பெயர்த்திலன்; உயிர் பிரிந்திலன்-கருணையால் பிறந்தான்.
 

கருணையால் பிறந்தான் -(உயிர்கள் மீது வைத்த) பெரும் கருணை
காரணமாக  அவதரித்து  வந்தவனாகிய  இராமபிரான்;  ஒரு நாழிகை
உயிர்த்திலன்
 -  ஒரு  நாழிகைப்  பொழுதளவும்  மூச்சு  விட்டிலன்;
ஒன்றும்   உணர்ந்திலன்,  -   ஒன்றும்  உணர்ந்தானில்லை;  உடல்
வியர்த்திலன்
 -  உடல் வியர்வை கொள்ளவும் இல்லை; கண் இணை
விழித்திலன்
 -  இரு  கண்களும்  திறக்கவும்  இல்லை;  அங்கையும்
தாளும் பெயர்த்திலன்
- அழகிய கைகளும் கால்களும்