நிலைபெயர்த்து அசைத்திலன்; உயிர் பிரிந்திலன் - (ஆனால்) உயிர்மட்டும் நீங்கப் பெறாதவனாயினான்; விண்ணோர் ‘அயிர்த்து இலன்கொல்?’ என்று அஞ்சினர் - (அந்நிலையில்) தேவர்கள் (அப்பிரான்) ‘உயிரொடுங்கினானோ’ என அச்சமுற்றனர். |
(199) |
| 8640. | தாங்குவார் இல்லை; தம்பியைத் தழீஇக்கொண்ட தடக் கை வாங்குவார் இல்லை; வாக்கினால் தெருட்டுவார் இல்லை; பாங்கர் ஆயினார் யாவரும் பட்டனர்; பட்ட தீங்குதான் இது; தமியனை யார் துயர் தீர்ப்பார்? |
தாங்குவார் இல்லை - (அங்கு இராமபிரானை) தாங்கிக் கொள்வார் எவரும் இலர்; தம்பியைத் தழீஇக்கொண்ட - தம்பியாகிய இலக்குவனைத் தழுவிக் கொண்டுள்ள; தடக்கை வாங்குவாரில்லை - (இராமனது) பெரிய கையினை (ப்பிரித்து) வாங்கி எடுப்பவர் ஒருவரும் இலர்; வாக்கினால் தெருட்டுவார் இலர் - தேறுதல் மொழிகளால் தேற்றுவாரும் இலர்; பாங்கர் ஆயினார் யாவரும் பட்டனர் - (அவனுக்கு) அணுக்கராயுள்ளோர் அனைவரும் இறந்துபட்டனர்; பட்டதீங்குதான் இது - (அவனுக்கு) உண்டாகிய துன்பம் இத்தகையது; தமியனை யார் துயர் தீர்ப்பார்? - (உற்றார் உறவினர் எவருமின்றித்) தனிப்பட்டவனைத் துன்பம் தவிர்ப்பவர் எவர் உளர்? |
(200) |
| 8641. | கவந்த பந்தமும், கழுதும், தம் கணவரைக் காணார் சிவந்த கண்ணியர் தேடினர் திரிபவர் திரளும், உவந்த சாதகர் ஈட்டமும், ஓரியின் ஒழுங்கும், நிவந்த; அல்லது, பிறர் இல்லை, களத்திடை நின்றார். |
கவந்த பந்தமும், கழுதும் - தலையற்ற உடம்புகளின் தொகுதியும், பேயும்; தம் கணவரைக் காணார் - தம்முடைய கணவரைக் காணப் பெறாமையால்; சிவந்த கண்ணியர் - (துயரத்தால்) சிவப்பேறிய கண்களை உடையவராய்; தேடினர் திரிபவர் திரளும் - தேடி அலைபவராகிய மகளிர் கூட்டமும்; உவந்த சாதகர் ஈட்டமும் - (தமக்கு உணவாகும் பிணங்களின் மிகுதிகண்டு) மகிழ்ச்சி கொண்ட பூதங்களின் தொகுதியும்; ஓரியின் ஒழுங்கும் - நரிகளின் வரிசையும்; நிவந்த அல்லது - மிகுந்து |