காணப்பட்டனவல்லாமல்; களத்திடை நின்றார் பிறர் இல்லை - (அப்) போர்க்களத்தின் கண்ணே உயிரோடு நின்றவர் பிறர்யாரும் இல்லை. | (201) | | 8642. | வான நாடியர் வயிறு அலைத்து அழுது, கண் மழை நீர் சோனை மாரியின் சொரிந்தனர்; தேவரும் சோர்ந்தார்; ஏனை நிற்பவும் திரிபவும் இரங்கின, எவையும் ஞான நாயகன் உருவமே ஆதலின், நடுங்கி. | வானநாடியர் - (இராமனின் துயரங்கண்ட) வானவர் நாட்டு மகளிர்; வயிறு அலைத்து அழுது - தம் வயிற்றில் அடித்துக் கொண்டு அழுது; மழைக்கண் நீர் - (மேகம் போன்ற) கரிய கண்ணின் நீரை; சோனை மாரியின் சொரிந்தனர் - விடா மழையினுடைய மேகம் போலச் சொரிந்தனர்; தேவரும் சோர்ந்தார் - தேவர்களும் மனம் சோர்வுற்று வருந்தினர்; எவையும் ஞான நாயகன் உருவமே ஆதலின் - எல்லாப் பொருள்களும் ஞானப் பொருளாம் இறைவனாகிய திருமாலின் வடிவங்களே ஆதலின்; ஏனை நிற்பவும் திரிபவும் - ஏனைய நிற்பனவும் நடப்பனவுமாகிய எல்லா உயிர்களும்; நடுங்கி இரங்கின - (அவ்விராமனைப் போலவே) நடுங்கி வருத்தமுற்றன. | நிற்பனவும், நடப்பனவுமாகிய எல்லா உயிர்களையும் தன் உடம்பாகக் கொண்டு எள்ளுக்குள் எண்ணெய்போல நிற்பவன் இறைவன். எனவே அவன் துயருற்று வருந்திய காலத்து அவ்வுயிர்களும் அவனைப் போலவே வருந்தா நின்றன என்பதாம். திருவிளையாடல் புராணத்தில், மண் சுமந்த படலத்துப் பாண்டியனின் பிரம்படி சிவபெருமான் மேல் பட்ட போதும், மகாபாரதத்தில் (வில்லிபாரதம்) அருச்சுனனின் வில்லடி அப்பெருமான் மீது பட்ட காலத்தும், எல்லா உயிர்களும் அவ்வடிகளைப் பெற்றனவாகக் கூறப்படுதல் காண்க. எல்லாப் பொருள்களிடத்தும் இறைவன் சர்வாந்தர்யாமியாய் உள்ளான் என்ற வைணவ தத்துவம் இங்கு குறிக்கப்பெற்றது. | (202) | | 8643. | முகையின் நாள்மலர்க் கிழவற்கும், முக்கணான் தனக்கும், நகையும் நீங்கிய; திருமுகம், கருணையும் நலிந்த; |
|
|
|