| தொகையுள் நின்றவர்க்கு உள்ளது சொல்லி என்? தொடர்ந்த பகையும் பார்க்கின்ற பாவமும் கலுழ்ந்தது, பரிவால். |
முகையின் நாள் மலர்க் கிழவற்கும் - மொட்டாகவில்லாமலே புதிதாக மலர்ந்தது போன்ற (திருமாலின் உந்திக்கமலமாகிய) தாமரையில் வசிப்பவனாகிய பிரமனுக்கும்; முக்கணான் தனக்கும் - மூன்று கண்களை உடையவனாகிய உருத்திர மூர்த்திக்கும்; கருணையும் நலிந்த - (இராமன் படுகின்ற துயரத்தைக் கண்ணுற்றதால் ஏற்பட்ட) இரக்கத்தினால் விளைந்த வருத்தத்தினால்; திருமுகம் நகையும் நீங்கிய - திருமுகங்கள் மகிழ்ச்சியாகிய மலர்ச்சியின் நீங்கி வாட்டமுற்றன; தொகையுள் நின்றவர்க்கு - (முப்பத்து முக்கோடி என்னும்) எண்ணின் அளவினை உடையவராய் நின்ற (ஏனைய) தேவர்களுக்கு; உள்ளது சொல்லியென்? - நேர்ந்த துன்பநிலையினைச் சொல்லி யாது பயன்?தொடர்ந்த பகையும் பார்க்கின்ற பாவமும் - தொடர்ந்துள்ள பகைமையுடன் (அத்துயரைக்) கண்ணுறுகின்ற பாவத்திற்குரிய தேவதையும்; பரிவால் கலுழ்ந்தது - (தன்னிலைமறந்து) இரக்கத்தினால் கண்ணீர் விட்டு அழுதது. |
(203) |
| 8644. | அண்ணலும், சிறிது உணர்வினோடு அயாவுயிர்ப்பு அணுகிக் கண் விழித்தனன்; தம்பியைத் தெரிவுறக் கண்டான்; ‘விண்ணை உற்றனன்; மீள்கிலன்’ என்று, அகம் வெதும்பா, புண்ணின் உற்றது ஓர் எரி அன்ன துயரினன் புலம்பும்; |
அண்ணலும், சிறிது உணர்வினோடு - பெருமை மிக்கவனாக இராமபிரானும் சிறிது உணர்வுடன்; அயாவுயிர்ப்பு அணுகி - பெருமூச்சு வரப் பெற்றது; கண்விழித்தான் - கண்களை விழித்தான்; தம்பியைத் தெரிவுறக் கண்டான் - தம்பியை நன்கு உற்றுப் பார்த்தான்; விண்ணை உற்றனன் மீள்கிலன் என்று- (இவன் இறந்து) விண்ணுலகடைந்தான் (இனி) மீளமாட்டான்’ என்று எண்ணி; அகம் வெதும்பா - உள்ளம் அழன்று வெம்மையெய்த; புண்ணின் உற்றது ஓர் எரி அன்ன - புண்ணில் நெருப்புத் |