பக்கம் எண் :

 பிரம்மாத்திரப் படலம் 599

தோய்ந்தது   போன்று;   துயரினன்   புலம்பும்   -   துன்பத்தினை
உடையவனாகிப் (பின்வருமாறு) வருந்தி அழுபவனானான்.
 

                                                (204)
 

    சிறிது உணர்வு பெற்ற இராமன் இலக்குவனைக் குறித்துப் புலம்புதல்
 

சந்தக் கலித்துறை
 

8645.‘எந்தை இறந்தான்’ என்றும் இருந்தேன்; உலகு எல்லாம்
தந்தனென் என்னும் கொள்கை தவிர்ந்தேன்; தனி
                                      அல்லேன்;
கந்தன் இருந்தாய் நீ என நின்றேன்; உரை காணேன்;
வந்தனென், ஐயா! வந்தனென், ஐயா! இனி வாழேன்!
 

‘எந்தை  இறந்தான்’ என்றும் இருந்தேன் - எம்தந்தை (தசரதன்)
இறந்தான் எனக் கேள்வியுற்றும் (இறவாது) இருந்தேன்; உலகு எல்லாம்
தந்தனென்    என்னும்    கொள்கை  தவிர்ந்தேன்
 -   ‘உலகம்
முழுவதனையும்   (பரதனே   ஆளத்)   தந்தேன்’   என்ற    (எனது
உறுதியான)  கொள்கையில் நெகிழ்ந்து நீங்கி (எனது  ஆணையின் வழி
பரதன்  ஆளும்படி) ஆட்சியை  ஏற்றுக்கொண்டவனாயினேன்; கந்தன்
நீ  இருந்தாய்
 -  (இருப்பினும்)  பற்றுக்கோடானவனாக நீ இருந்தாய்;
தனி அல்லேன் என நின்றேன் -(ஆதலினால்) நான் தனித்துள்ளவன்
அல்லேன்  என  எண்ணி  (உறுதியுடன்) நின்றேன்; உரைகாணேன் -
(இன்றோ)   உனது   உரையை   நான்    காணப்   பெற்றேனில்லை;
இனிவாழேன்   -  இனியும்  நான்  வாழ்ந்திருக்க மாட்டேன்;  ஐயா!
வந்தனன்
 -  ஐயனே!  வந்துவிட்டேன்!  ஐயா! வந்தனன்! - ஐயனே!
வந்துவிட்டேன்!
 

                                                 (205)
 

8646.‘தாயோ நீயே; தந்தையும் நீயே; தவம் நீயே;
சேயோ நீயே; தம்பியும் நீயே; திரு நீயே;
போயோ நின்றாய்; என்னை இகந்தாய்; புகழ் பாராய்,
நீயோ; யானோ, நின்னினும் நெஞ்சம் வலியேனோ?
 

தாயோ  நீயே;  தந்தையும்  நீயே;  தவம் நீயே; - (எனக்குத்)
தாயும் நீயே; தந்தையும் நீயே; தவமும் நீயே; சேயோ நீயே; தம்பியும்
நீயே;