பக்கம் எண் :

6யுத்த காண்டம் 

அவை ஓர் கலக்கம்  காண்பான் - அந்தச்  சீதைக்கு  ஒரு பெரும்
கலக்கத்தை உண்டாக்கிக் காண்பதற்காக; கண்டான் - பார்த்தான்.
 

மானக்குணம் - பெருமை  மிகு  பண்பு.  கண்டான்....காண்பான்  -
தொடை முரண்.
 

                                                  (7)

7639.

இட்டதோர் இரண பீடத்து, அமரரை இருக்கை நின்றும்,
கட்ட தோள்-கானம் சுற்ற, கழல் ஒன்று கவானின் தோன்ற,
வட்ட வெண் கவிகை ஓங்க, சாமரை மருங்கு வீச,
தொட்டது ஓர் சுரிகையாளன் இருந்தனன், இனைய
                                     சொன்னான்.

 

தொட்டது ஓர்சுரிகையாளன் - இடையில் கட்டிய குற்றுடை வாளை
உடைய  இராவணன்; இட்டதோர் இரண பீடத்து - போடப்பட்டிருந்த
பொன்னால்   ஆகிய   பீடத்தில்;  அமரரை  இருக்கை நின்றும்  -
தேவர்களைத்  தங்கள்  இருப்பிடத்தில் இருந்து; கட்ட தோள்  கானம்
சுற்ற  
  -   அப்புறப்படுத்திக்   களைந்த   தோள்களின்    தொகுதி
சூழ்ந்திருக்க;  கழல்  ஒன்று கவானின் தோன்ற - எடுத்துவைத்த ஒரு
கால்  தொடை மீது  தோன்ற;  வட்டவெண்  கவிகை  ஓங்க - வட்ட
வடிவமைந்த  வெண் கொற்றக் குடை தலை மீது  ஓங்கிப்  பிடிக்கப்பட;
சாமரை  மருங்கு  வீச  - வெண் சாமரைகள் இருமருங்கும் வீசப்பட;
இருந்தனன்  இனைய   சொன்னான்   -  இருந்து  இச்சொற்களைக்
கூறினான்.
 

இரணம் -  பொன்,  கட்டல்  - களைதல், கானம் - தொகுதி, கவான்
- தொடை.
 

                                                  (8)
 

7640.

‘என்றுதான், அடியனேனுக்கு இரங்குவது? இந்து என்பான்,
என்றுதான், இரவியோடும் வேற்றுமை தெரிவது என்பால்?
என்றுதான், அனங்க வாளிக்கு இலக்கு அலாதிருக்கலாவது?
என்று, தான் உற்றது எல்லாம் இயம்புவான் எடுத்துக்
                                     கொண்டான்.